அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சமரசங்களுக்கு’ உள்ளானதாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, உப்பாறு பகுதியில் மகாவலி கங்கையை அண்டி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் இரு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, செவ்வாய்க்கிழமை(10) அன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்காக புதிய ‘தேசியக் கொள்கை’ ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
பெண்கள் தமக்கான சம உரிமையை தமதாக்கி முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் காலமாக தற்போதைய காலம் உணரபட்டாலும் வேலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பெண்ணை இரணடாம் தரப் பிரஜயாக பார்க்கும் ஆண்மேலாதிக்க சமூக்கண்ணோட்டமே இன்றும் என் சமூகத்தில் புரையோடித்தான் இருக்கின்றது.
சர்வதேச மகளிர் தினம் இன்று (08) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், லிந்துலை – அக்கரகந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் தமது குடும்பங்களைக் காக்க வீதியில் இறங்கிப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே உலகமே ஒரு எரிமலை மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வுதான். கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய தாக்குதல் இப்போது அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.