6 வருடங்களாக தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்

கைது செய்யப்பட்டுள்ளவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 35 வயதான அஜந்தன் என்பது தெரியவந்துள்ளது. பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு 6 மாத கால விசாவில் இந்தியா வந்ததாகவும், விசா காலம் முடிந்து இலங்கை திரும்பாமல், மேற்கு வங்கம், ஆந்திரா, டில்லி, கேரளா, தமிழ்நாடு என நாட்டின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளாா். 

பொலிஸார் அவரைக் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தியுள்ளனர்.