வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா மீது மூன்றாவது முறையாக விசாரணை நடைபெற்றபோது

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா பிலோர்ஸ் மீது மூன்றாவது முறையாக விசாரணை நடைபெற்றபோது, மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தி, மதுரோவை உடனடியாக விடுதலை செய்யவும், வெளிநாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை நிறுத்தவும் கோரியுள்ளனர்.ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஜனாதிபதியை சட்டவிரோதமாகக் கடத்தி விசாரணைக்கு உட்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்றும், இது அமெரிக்காவின் அத்துமீறலான நடவடிக்கை என்றும் போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,அமெரிக்காவின் அத்துமீறல்களையும் தன் சொந்த நாட்டு மக்களே ஏற்க மறுத்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.