சம்பந்தர், மைத்திரி, ரணில், மகிந்த…….!

“நடைமுறையில் தேசிய அரசாங்கம் என்பது இல்லை. தேசிய அரசாங்கம் என்று சொல்வது பம்மாத்து. வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இருபெரும் சிங்கள கட்சிகள் இணைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர் இச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது தேசிய நல்லிணக்க அரசாங்கத்துக்கு நெருக்கடி குடுக்க கூடாது என்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் பம்மாத்து.

மைத்திரி – ஜனாதிபதி
ரணில் – பிரதமர்
சம்மந்தர் – எதிர்கட்சித்தலைவர்

இந்த கூட்டு, சீன சார்பு மகிந்தவை அகற்றுவதற்கு மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட கூட்டுச்தி

மைத்திரி – தனது கட்சிக்கும் விசுவாசமாக இல்லை நாட்டுக்கும் விசுவாசமாக இல்லை

ரணில் தன் நாட்டுக்கு விசுவாசமாக இல்லை

சம்மந்தர் தன் மக்களுக்கு விசுவாசமாக இல்லை

மூவரும் விசுவாசமாக இருப்பது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கே

சுயத்தை தொலைத்த இவர்களால் நல்லிணக்கத்தையும் கொடுக்க முடியாது நல்லாட்சியையும் கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் கொடுக்க முடியாது. இவர்கள் மூவரையும் ஓரணியில் வைத்திருப்பது அமெரிக்கா அங்கு நிலை மாறினால் இங்கு நிலை தடுமாறும் புதிய அரசியல் அமைப்பு சாசனம் என்பது கானல் நீராகவே போகப்போகிறது

இலங்கையின் அரசியல் அமைப்பு சாசன திருத்தத்துக்கு உண்மையாகவே உழைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்காவே. அவர் சுதுநிலமே அமைப்பை உருவாக்கி புதிய அரசியல் அமைப்பு சாசனத்தை சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஏற்கப்பண்ணுவதற்கான முன்முயர்சிகளை உளமாரவே முன்னெடுத்தார். அதனை சரியாக பயன்படுத்தாது விட்டமை புலிகள் செய்த முட்டாள் தனம். அன்று உயிருக்கு பயந்து சம்மந்தரும் சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை இன்று சந்திரிக்கா பல் புடுங்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் மகிந்தவை பழிவாங்க வேண்டும் என்ற வெறியே மேலோங்கியுள்ளது.

தனது கூட்டமைப்குக்கு உள்ளேயே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்க முடியாத, தானே அரசியலுக்கு கொண்டு வந்த விக்கினேஸ்வரனை தொடர்ந்தும் இணைத்து வைக்க தெரியாத சம்மந்தனா மகிந்தவை சமாதானப்படுத்த போகிறார் இவரா பெளத்த மட பீடங்களை அணுகி சமாதானபடுத்த போகின்றார்.

இவற்றை சாத்தியமாக்குவதற்கு ஒரு political will வேண்டும் அது இவர்கள் மூவரிடமும் இல்லை. மகிந்தவிடம் அது இருந்தது. அந்த political will தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இல்லாவிட்டால் இன்றும் தினமும் சராசரியாக 100 பேர் என்னத்துக்கு என்று தெரியாமல் இறந்து கொண்டே இருப்பார்கள். தற்போதைய இலங்கை ஒரு சமூக ஜனநாயக புரட்சிக்கான தேவையை உணர்த்தி நிற்கிறது. இந்த எந்த அரசியல்வாதிகளும் அதனை முன்னெடுக்கப் போவதும் இல்லை மாற்றத்தை கொண்டுவர போவதும் இல்லை. அதற்கான தேவை சிங்கள மக்களை தவிர தமிழ்மக்களுக்கே மிக மிக அவசியமாக உள்ளது ”

(Valavan)