பட்டும் திருந்தவில்லை

1952 இல் சேர்.யோன்.கொத்தலாவல பிரதமராகிய பின் யாழ்ப்பாணம் வந்தார்.இவருக்கு யாழ் ம்த்திய கல்லூரி மைதானத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பில் அமிர்தலிங்கம் தலைமையில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் மூலம் அமிர்தலிங்கம் பிரபலமானார்.இருந்தாலும் இந்த வரவேற்பை கொத்தலாவல பொருட்படுத்தவில்லை. அதன் பின் தீவுப்பகுதியில் கொழும்பு தமிழ் வர்த்தகர்களால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பைக் கண்டு மகிழந்த கொத்தலாவல உணர்ச்சிவசப்பட்டு தமிழுக்கு ஒரு சிறந்த இடத்தை வழங்க ஏற்பாடுசெய்வதாக கூறினார்.இந்த உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தை இலங்கையில் அரசியலையும் அரசியற்போக்கையும் சின்னாபின்னமாக்கியது.

இதன்பின் 1954 இல் ஐ.தே.க களனிமகாநாட்டில் சிங்களத்தை அரசகரும மொழியாக்க ஜே.ஆர் .தீர்மானம் கொண்டுவந்தார்.இதன்மூலம் கொத்தலாவல அவர்களை பின்தள்ளுவதே அவரின் நோக்கமாக இருந்தது.

சமயம் பார்த்து காத்திருந்த பண்டாரநாயக்கா 1956 பொதுத்தேர்தலின் போஅது 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை அரச கரும மொழியாக்குவதாக அறிவித்தார்.

1965 இல் பிரதமாரான டட்லியை ஜி.ஜி. பொன்னம்பலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேற்புக் கொடுத்தார்.அதற்கு சவாலாக ஜே. ஆர் ஜெயவர்த்தனா அவர்களை காங்கேசந்துறையில் இருந்து வண்டியில் வைத்து அமிர்தலிங்கம் செல்வநாயகம் ஆகியோர் ஊர்வலமாக அழைத்துவந்து ஜே.ஆர் அவர்களை குசிப்படுத்தினார்கள்.

அதே ஜே.ஆர் தான் மூன்று இனக்கலவரத்தின் பிதாமகன் .

இதேபோல கனடாவில் புதிய வியாதிகள் தொடங்கியுள்ளன.ஆரம்பத்தில் ஜிம்கரியானிஸ் என்ற பாராளுமன்ற உறுப்பினர் சகல விழாக்களிலும் அழைக்கப்பட்டார்.பின் ்ஜக் லெற்றன்.ராதிகா என தொடர்ந்தது .

இப்போது ஜஸ்ரின் ரூடோ.கொத்துரொட்டி போடவைத்தார்கள்.சிலம்பாட்டம் ஆட வைத்தார்கள்.அவரை இப்போது நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.அவரைப் பொறுத்தவரை கனடிய அரசியலைவிட உலகின் பிற இனத்தவர்களிடம் தன்னை விளம்பரப்படுத்துவதே நோக்கமாகவுள்ளது.நாடு,அரசியல் என்பதில் ஒரு தெளிவற்ற நிலையில் உள்ளார்.

ஜஸ்ரின் ரூடோவை தவறாக பயன்படுத்துவதன்மூலம் குடிவரவாளர்களுக்கு குடிவரவாளர்களே பிரச்சினைகளுக்குள் தள்ளும் நிலை உருவாகலாம்.

வேண்டாம் இந்த திருக்கூத்து,தெருக்கூத்து.

(Vijay Baskaran)