27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுந்தர் என்ற அமலன் சுகந்தன் என்ற யூலியற் இருவரும் EPRLF இயக்கத்தின் போராளிகள். சுந்தர் என்பவர் தனது இயக்கத்தின் முன்னனிப்போராளியாகவும் பல அசாத்தியமான செயல்களையும் செய்தவர். புலிகளினால் முல்லைத்தீவில் வைத்து கால்கள் அடித்து முறிக்கப்பட்டு கொல்லப்பட்டவர். நேசித்தது மக்களின் நலன்களையும் விடுதலையையும் மட்டுமே. தான் பிறந்த ஊருக்கு நிறைய நற்செயல்கள் நடக்க காரணமானவர். ஒட்டுமொத்த தமிழர்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் குத்தககைக்கு எடுத்தவர்களால் கொலை செய்யப்பட்டார். புலிகள் தங்களுடன் இணைத்து வேலை செய்ய பேரமும் பேசினார்கள். அவர்களுக்கு உடன்படுவது போல் போக்கு காட்டி தப்பி ஓடியவர். இருந்தும் மீண்டும் புலிகளினால் கொலை செய்யப்பட்டார்.

மிகவும் நல்ல முன்னுதாரணமான போராளி தமிழ் மக்கள் இழந்தது துரதிஸ்டமே. பலநாள் தேடலுக்கு பின் அவரின் ஆசானால் எனக்கு கிடைக்கப்பெற்ற ஆவணமிது. இந்தப் போராளியை உலகின் முன் கொண்டுவருவதில் அந்தப் போராளியின் கொள்கைகளுக்கும் சுயநலமின்றி தனது உயிரையும் தனது தம்பியின் உயிரையும் இந்த மக்களுக்காக அர்ப்பணித்தற்கு நான் செய்யும் ஓர் சிறிய நன்றி மாத்திரமே. எப்படியான விமர்சனங்களையும் ஏற்று அதில் தன்னை சுயவிமர்சனத்துக்குட்படுத்திய உன்னத உயிர். சிறிய காலப் பழக்கமென்றாலும் அவரின் கொள்கைகள் என்னை கவர்ந்தது. மீண்டும் இந்த உன்னத போராளிக்கு எனது வணக்கங்கள். எத்தனையோ கொடுமையானவர்கள் தங்களது பதிவுகளை உலகுக்கு கொண்டு வரும் இவ்வேளை இந்த போராளியினதும் பதிவு வெளிவர வேண்டும். அவரின் ஆசான் சில குறிப்புக்களை தந்திருக்கிறார். மீண்டும் ஓர் நிறைவான விரிவான பதிவை இவ்வுலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும் எனது இறுதிக்காலத்துக்கு முன்பு . நான் நேசித்த மனோ மாஸ்டர் அமலன் என்ற சுந்தர் புலிகளின் பெண்போராளிகளான எனது தோழிகள் சோதியா சுபாங்கி போன்றோர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். புலிகளில் இருந்தாலும் சோதியா சுபாங்கியை நானறிவேன். அவர்களின் மனிதாபிமானம் இரக்ககுணம் கருணை எல்லாம் நானறிவேன் அதை நான் நேரடியாக அனுபவித்தவள். என்றும் இந்த உயிர்களை என்னுயிர் உள்ள வரை மறக்க முடியாது .

(Kala Sellaiah)

1985 ஆண்டு என்று நினைக்கின்றேன் ஈழவிடுதலைக்கான வெகுஜன வேலையின் ஒரு அங்கமாக பிரச்சார் வேலையில் சுந்தரும் ஏனைய தோழர்களும் ஈடுபட்டிருந்து காலம். புல்லைத்திவு நகரம் இராணுவத்தின் அதிக கட்டுப்பாட்டில் இருந்த பகுதி முல்லைத்தீவு நகரம் சிறப்பாக பஸ் ஸ்ரான்ட் இன்ஊடு கிழக்கு மேற்காக செல்லும் வீதி பஸ் ஸ்ரான்ட் இல் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் திசையில் பதிவாக செல்லும். இப்பகுதிக்குள் இயக்க வேலை செய்வது கடினம் நிச்யம் இராணுவத்திடம் மாட்டுப்படவேண்டி இருக்கும் இராணுவத்தை எதிர்து முழு அளவில் தாக்குதல் நடத்தும் வலு எந்த விடுதலை அமைப்பிடமும் இல்லாத காலம். நகரைச் சுற்றி வளைத்தால் யாரும் இராணுவத்திடம் இருந்து தப்பமுடியாத பூகோள அமைப்பைக் கொண்டது. (நகரைத் தெரிந்தவர்களுக்கு இது புரியும்). சுந்திரடம் எப்போதும் நிலை கொண்ட அசாத்தியத் துணிவு இன்னும் இரு தோழர்களுடன் சுவரொட்டி ஒட்டுவதற்காக இராணுவப்பிரசன்னம் இல்லாத ஒரு சாமத்தில் கணத்தில் ஒட்டி கணத்தில் தப்பி வருவது என்ற செயன் முறையின் அடிப்படையில் செயற்படுதப் முனையப்பட்டது ஆனால் இராணுவம் சுந்தரையும் இன்னும் ஒருவரையும் மடக்கி படித்து அவர்களுக்கு காவலாக ஒரு இராணுவத்தினரை விட்டுவிட்டு மற்றைய ஒருவரைத்தே நகருக்குள் தேடுதலில் ஈடுபட்டது.

இராணுவத்தின் காலடியில் குந்தியிருந்த சுந்தர் இராணுவம் சிறிது அசமந்தாக இருந்து போது அவரின் துவக்கைப் பறித்து அவரை சுட்டுவிட்டு தப்பி ஓட முற்பட்டார் வெடிச்சத்தம் கேட்டு ஏனைவர்கள் திரும்பிவரும் போது பல இராணுவத்தின் வெடிகளுக்கு மத்தியல் காம் பட்டபடி தப்பி ஓடி நகரை விட்டு வெளியேறினார். இரவு முழுவதும் காயத்திற்கான முதல் உதவி சிகிச்சையை எடுத்த பின்பு இதற்கான நிரந்தர வைத்தியம் செய்வதற்காக தனியாக தனது மோட்டார் சைக்கிளில் கழுத்தில் காயத்தை சுற்றிக்கட்டியபடி ஆனையிறவு தடை பகுதிகுள்ளால் இலங்கை இராணுவத்திடம் காயத்திற்கான வேறு காரணத்தை சொல்லி நம்ப வைத்து யாழ் வந்து சேர்ந்தார் யாழ்வந்த பின்பே பலருக்கும் இச்சம்பவம் தெரியும் (அப்போது முழுமையான சிகிச்சைக்கான சசதிகளும் பாதுகாப்பும் யாழ் வைத்திய சாலையிலேயே கிடைத்தன.) காணத்துடன் ஆனையிறவு சோதனைச்சாவடியை கடந்தது சரியான செயற்பாடு அல்ல என்று கண்டித்து பின்பு அவருக்கு சிகிச்கையிற்கான ஒழுங்குகளை மேற்கொண்டோம் ஏன் இதனை இங்கு பதிவு செய்கின்றேன் என்றால் சுந்தர் எப்போதும் அசாத்திய துணிச்சலுடன் செயற்படும் இயல்பை உடைய அர்பணிப்புள்ள போராளி இவரின் இச்செயற்பாடு இவரை புலிகள் கொல்லுவதற்கும் ஏதுவாக இருந்திருக்கலாம்புலிகளால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் தொடரந்தும் தனது மக்களுடன் நின்று அவர்களுக்கான சேவைiயை செய்து தன் உயிரை அர்பணித்து உண்மையான போராளி

இவரைப் போலவே அசாத்திய துணிச்சல் கொண்ட இன்னொரு போராளி சிவா இவர் ஒரு தடவை பொது மக்கள் போராளிகள் என சகலரையும் புதுக்குடியிருப்பு சந்தியில் இராணுவம் தடுத்துவைத்து வரிசையில் வைத்து ஒருவர் ஒருவராக சுட்டுக் கொன்று வந்தனர் சிவாவின் நேரம் வந்ததும் இராணுவம் சுடும் கணத்தில் குண்டு பட்டவர்போல் வீழ்ந்து இறந்தவர்களுடன் இறந்தவர்கள் போல் நடித்து இராணுவம் விலத்தியதும் தப்பியோடியவர் பனிபு ஒரு தடவை மீண்டும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு ஆனையிறவு முகாம் நோக்கி ஜீப்பில் எடுத்து சென்ற போது ஒடும் ஜீப்பில் இருந்து பாய்ந்து இராணுவத்தின் சரமாரி வெடிகளிடையே தப்பியவர் பின்பு புலிகளின் காலத்தில் என்ன நடந்திருக்கும் தெரியும்தானே.

(Comrade James)