ஆனால் தொடர்ந்த 5 வருட ஆட்சியின் பின்பு மீண்டும் நடைபெற்ற தேர்தலில் இந்த இடதுசாரி முன்னணி தேர்தலில் வெற்றி பெறாது மீண்டும் வலதுசாரிகள் ஆட்சியைப் பிடித்தனர்.
இதற்கு காரணம் 50 வருட வலதுசாரிகளின் ஆட்சியில் இருந்த அதிகார வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தை மாற்றி அமைக்க முடியாது போறிக் கப்றியலால் தொடரப்பட்ட ஆட்சிதான் பிரதான காரணம் ஆயிற்று.
இதே போல் 2014 ம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்த இந்தியாவின் ஜனநாயக முற்போக்கு அரசிற்கான ஆதரவை அமெரிக்காவின் அணுக் கொள்கை ஒன்றினால் ஏற்பட்;ட காங்கிரஸ் கம்யூனிஸ்ட் முரண்பாட்டினால் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது
இதனைத் தொடர்ந்து தீவிர வலதுசாரிக் கட்சி பாஜக உருவாகி அது 12 வருடங்களாக இந்தியாவை ஆட்டிப்படைக்கின்றது.
1978 இல் நிகரகுவா புரட்சியில் டானியல் ஒடேகாவின் சன்டினிட்ஸ்டாகளின் வெற்றியும் ஆட்சியும் அவரின் முதல் 5 ஆண்டுத்த தவணையுடன் முடிவிற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து சன்டிஸ்ட்டுகள் புரட்சி மூலம் அகற்றி ஆட்சியைப் பிடித்த அதே வலதுசாரிகளிடம் தேர்தலில் தோற்றுப் போனார்கள்
புரட்சிக்கு பின்னரான மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை பூர்த்தி டானில் ஒடேகாவின் இடதுசாரி அரசால் முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லை
புரட்சியிற்கு முன்பு ஆட்சியில் இருந்த வலதுசாரி அதிகார ஆளும் வர்க்க அடுக்குகள் தகர்க்கப்படாமையினால் இது சாத்தியம்மற்றுப் போனது
ஆனால் தேர்தல் தோல்வியிற்கு பின்னர் டானியல் ஒடேகாவின் சன்டினிஸ்ட்கள் மக்களை தொடர்ந்து சந்தித்து அடுத்துத தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
அதிகார அடுக்குள் உடைக்கப்பட்டு இன்று வரை ஜனநாயக முறைப்படி தொடர்கின்றது அவர்களின் ஆட்சி.
இலங்கையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு இந்த உலக அனுபவங்களை கருத்தில் கொண்டாக வேண்டும்.
ஜேஆர் ஜெயவர்தனாவின் சிந்தனையில் உருவான வலதுசாரி அரசு அரச அதிகாரம் அரசியல் அமைப்பு படைகளின் கட்டுப்பாட்டிலேNயே இன்று வரை இலங்கை ஆட்சி அதிகார அடுக்குள் இருக்கும் சூழல் உள்ளது.
ஜேஆரினால் முதுகெலும்பு உடைக்கப்பட்ட இடதுசாரி அமைப்புக்களின் தொழிற் சங்கங்கள் இன்று வரை 1980 முந்தைய நிலையில் உள்ள வீரியமாக செயற்படும் அளவிற்கு இன்றுவரை எழுந்து வர முடியவில்லை.
ஜேஆரின் இந்த செயற்பாடுகள் இலங்கையின் இடதுசாரி இயக்கங்களையும் வேறற்று அறுத்து எறியப்பட்டதாக இன்றும் உணரப்படுகின்றது.
இந் நிலையில் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால்தான் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருக்க முடியும் தொடர முடியும்
இதற்கான சாராம்சங்களை அதற்குரிய ஆதாரங்களுடன் முன்வைப்தாகவே நந்தன வீரரத்ன இன் புத்தகம் சொல்லுவதான உணர்வே எனக்குள் அதனை வாசிக்கும் போது ஏற்படுகின்றது
கூடவே 1983 ஆடிக் கலவரத்தை ஒரு புகைப்பட ஊடகவியலாளர்… சந்திரகுப்த அமரசிங்க தனது உயிரைப் பயணம் வைத்து பொரளையில் எடுத்து புகைப்படம் அவரின் தொழில் தர்மத்தின் அடிப்படையில் அவருக்கான கொலை அச்சுறுத்தல் துரத்தல்கள் என்பவற்றில் இருந்து தப்பி வந்து பொது மக்கள் முன்னிலையில் முன்வைத்தார்
இத்தனைக்கும் அவர் ஒரு தீவிர பௌத்த சிங்கள தேசியவாதியவாதி.
தொழில் தர்மத்துடன் செயற்பட்டு வெளி வந்த அந்த ‘புகழ்பெற்ற’ ஆவணப் புகைப்படம் தான் இன்றுவரை இலங்கை வாழ் சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிடப்பட:டு 1983 ம் ஆண்டு அன்றை ஜேஆர அரசினால் மேற்கொள்ளப்பட்ட அநீதிகளை நிறுவி நிற்கும் புகைப்படமாகி உயிர் வாழ்கின்றது.
இது வியட்நாமில் அமெரிக்கா வீசிய நேபாம் எரிகுண்டில் ஒரு பெண் குழந்தை எரிந்தபடி நிர்வாணமாக தெருவில் ஓடிய புகைப் படம் அமெரிக்காவின் கோர முகத்தை அம்பலப்படுத்தி வியட்நாம் மக்களின் விடுதலையையும் உறுதி செய்ததற்கு ஒத்ததான் புகைப்படம்தான்.
இந்த புகைப்படம்தான் இன்று வரை அமெரிக்காவை உலகில் அம்பலப்படுத்தியும் நிற்கின்றது
ஆனால் ஈழத்து தெருக்களில் 1986 மே மாததில் ஆரம்பித்து ஒவ்வொரு ஈழ விடுதலை அமைப்புகளாக தடை செய்து அந்த போராளிகளை உயிருடனும் எரித்த விடயஙகளை புகைப்படம் பிடிக்க எமக்கு ஒரு சந்திரகுப்த அமரசிங்க இருக்கவில்லை.
அது ‘கந்தன் கருணை படுகொலை’ ‘துணுக்காய் வதை முகாம் சக கொலை முகாம்’ என்றாக வாகரையின் ஒன்றாக ஒரே அமைப்பில் இணைந்து போராடிய பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தி கொன்ற போதும் ஒரு சந்திரகுப்த அமரசிங்க வாகரைலும் இருக்கவில்லை… நல்லூரிலும் உலாவவில்லை துணுக்காயிலும் படம் பிடிக்கவில்லை.
ஆனால் மீண்டும் இசைப் பிரியாக்களை இலங்கை இராணுவம் நிர்வாணம் ஆக்கிய அந்த கொடூரத்தை புகைப்படம் எடுத்து அம்பலப்படுத்த சில சந்திரகுப்த அமரசிங்க எம்மிடையே இருந்ததான்
இருக்கின்றார்கள்… அது அனேகம் இலங்கை இராணுவத்திற்குள் இருந்த சில மனித நேயங்களாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்
தமிழ் குறும் தேசியத்தின் பாசிச புலிகள் வடிவில் கோரத் தாண்டவம் ஆடியது போது நிலவிய மௌனம்தான் எமக்கு நந்தன இன் உண்மை வெளிக்கொணர்தல் என்ற புலனாய்வு புத்தகத்தின் தேவை எம்மத்தியிலும் தேவையாக உள்ளது என்பதை உணர்த்தி அதனைத் சாத்தியமாக்கும் வரலாற்றுக் கடமையையும் ஒப்படைகின்றது
இந்த உணர்வுதான் நந்தன இன் புத்தகததை வாசிக்கும் போது எனக்குள் ஏற்பட்டது
1983 ம் ஆண்டு ஆடிக் கலவரத்தின் போது பொரளையில் ஒரு தொழில் தர்ம உள்ள ஊடகவியலாளர்…. தொழில் முறைப் படப்படிப்பாளர் மனிதன் அவன் பௌத்த மதத் தீவீர நம்பிக்கையாளானக சிங்களாவராக இருந்தும் தனது கடமையை சரியாகவே செய்தான்.
அதனால் இன்று வரலாற்றில் அவன் மனிதானாக உணரப்படுகின்றான்
இதுதான் இங்கு எம் மத்தியில் கேள்விகள் ஆகி நிற்கின்றது. தமிழர் தரப்பில் இல்லாது இருக்கும் ஊடகத் தர்மத்தை கேளவிக் குறியாக்கியும் நிற்கின்றது
அதனால்தான் கூறுகின்றேன் எம் மத்தியிலும் நந்தன வீரரத்ன போன்ற புலனாய் எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் இவைகளும் புலனாய்வு செய்து எழுதப்பட வேண்டும்
சித்திரகுப்த அமரசிங்காகள் உருவாக வேண்டும்
இந்த வெறுப்பு அரசியலை பேரினவாத்தை சிறுபான்மையினை ஒடுக்கும் செயற்பாடுகளை இதற்கான அடித்தளங்கள் ஐதே கட்சியால் அதன் முதல் தலைவர் டிஎஸ் செனநாயக்காவினால் அம்பாறையின் கல் ஓயா(பட்டிப்பளை ஆறு… கல்லாறு) வில் போடப்பட்டது இலங்கை பிரித்தானியாவில் இருந்து காலனி ஆதிக்க சுதந்திரம் அடைந்த போது.
இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாக டி.எஸ். செனநாயக்கா பதவி ஏற்ப போது பிரிதானியாவின் அனுசரணையுடன் பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்ட இஸரேல் என்ற பிரித்தாளும் கொள்கை அடிப்படையிலான இஸ்ரேல் உருவாக்கத்தின் சிந்தனையை இலங்கையில் பிரிதானிய சியோனிச சிந்தனையின் இணைப்பாக அன்றைய மட்டக்களப்பு மாவட்டம் என்று அறியப்பட்ட இன்றைய திகாமடுல்ல அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த கல் ஓய திட்டமிட்ட குடியேற் திட்டம் ஆகும்
அன்றே இலங்கையின் உள்ளநாட்டுப் பிரசனையில் இஸ்ரேலின் கைங்கரியம் தனக்கான நாட்டை பாலஸ்தீன மேற்குக்கரையில் உறுதி செய்வதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாற்று ஆவணங்கள் ஆகும்
டி எஸ் இன் மரணம் இதற்கு பின்னர் அவரின் மகன் டட்லி இன் பிரதமர் என்றான போது ஐதேசியக் கட்சியிற்கு மக்கள் மத்தியில் கீழ் நிலை ஆதரவை நோக்கி நகர எஸடபிள்யூ பண்டாரநாயக்காவின் சிறீலங்கா சுதந்திர கட்சியின் உருவாக்கம் எழுச்சி என்றாக நாடு இந்த கட்சியில் தலமையிலான ஆட்சியாக மாற்றம் அடைந்தது .
அதனால் கல்லோயவிற்கு பின்பு அதே வேகத்தில் தமிழ் பிரதேங்களில் குடியேற்றம் என்பது அதிகம் வேக எடுத்து நடைபெறவில்லை.
ஆனால் மீண்டும் 1977 இல் ஆறில் ஐந்து(5/6) பெரும்பான்மையுடன் ஜேஆர் தலமையிலான ஆட்சி அமைந்த பின்பே அது மகாவலி கங்கை திட்டம் என்றாக சேருநுவர என்றாகி டொலர் கென்பாம் வரை இன்று பரவி உள்ளது
இதற்கு மகாவலி கங்கை அபிவிருத்தி அமைச்சு என்றாக காமினி திசநாயக்கா அமைச்சராக இருந்தாலும் தனது மகன் ரவி ஜெயவர்த்னதவைதான் ஜேஆர் இந்த திட்டமிட்ட குடியேற்ற செயற்பாடுகளுக்கு பாவித்தார்.
இதன் ஒரு வடிவம்தான் ஈழப்போராட்ட காலத்தில் உருவான எஸ்ரிஎவ் என்ற படையணி கிழக்கிற்காக அமைக்கப்பட்டதும் முஸ்லீம்களை பயன்படுத்திய ஊர்காவல் படைகளும் ஆகும்.
இதன் மூலம் ஒரே மொழி பேசும் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையே நிலவி வந்த சகோதரத்துவ உறவு சீரற்ற நிலை ஏற்படுவதற்கு ஆழமான காரணமும் ஆயிற்று.
இதற்கான ஆழமான விதைகளை இந்த கட்சி ஆரம்பத்தில் மெதுவாக அபிவிருத்தி என்று ஆரம்பித்தாலும் ஜேஆர்தான் தனது புதிய அரசு அரச அதிகாரம் அரசியல் அமைப்பின் மூலம் ஆழம் போட்டார்.
இதற்கு சமாந்தரமாகத்தான் தமிழர் தரப்பிலும் குறும் தேசியம் பேசும் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றாக இன்றுவரை ‘நண்பேன்டா….’ என்று ஐதே கட்சியில் வலதுசாரித் தனத்தை கொழும்பு யாழ்ப்பாண மேட்டுக்குடி இணைப்பாக செய்து வரும் அரசியல் இங்கு இந்த புத்தகத்தில் சிங்களப் பேரினவாதத்தில் ஐதே கட்சியும் அதன் பிரதான பிதாமகன் ஜேஆர் உம் தோல் உரிக்கப்படுகின்றார்.
முலையகத்திலுத் தொண்டமான் என்கின்ற சந்தா வழி தொழிற் சங்கம் பல வகையிலும் இந்த வலதுசாரி ஜேஆரின் அரசிற்கு உதவிகரமாக தமது மந்திரிப் பதவிகளை தக்க வைத்த வண்ணமே நகர்ந்ததுதான் இனறு வரை 20 வருடங்கள் தாண்டியும் முகவரி அற்றி லயன் வாழ்வை அந்த மக்கள் தொடர்வதற்கும் காரணங்களில் ஒன்றாகவும் அமைகின்றது.
இவை எல்லாவற்றின் திரட்சியாக நீட்சியாக இன்று நிலவும் பாதாள உலகம் வரை நீண்டும் செல்கின்றது.
இதற்குள் இன்று போதைவஸ்து மாபியாக்களுகம் பலமாக தம்மை தகவமைத்தும் கொண்டுள்ளனர்
இலங்கை இராணுவத்தில் இருந்து ஆயுதங்களுடன் தப்பி ஓடி பாதாள உலகத்தினராக வாழும் சூழல் இலங்கை பயங்கரவாததச் சட்டத்தில் எழுதப்படாத விதியாக சிங்கள பாதாள உலகத்தினருக்கு இருந்தே வந்திருக்கின்றது.
ஆனால் 2009 புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு இதே கொலை வெறி பாசிசக் கலாச்சாரம் தமிழ் பிரNதுசங்களல் சிறப்பாக யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி வடக்கில் ‘வாள் வெட்டு; கலாச்சாரமாக மேல் எழ மட்டும் அனுமதிக்கும் பயங்கரவாததச் சட்டத்தினால் நசுக்கப்படுதால் அது வாள் வெட்டு கோஸ்டிகளாக பாதாள உலக வேலைகளில் தமிழ் பிரதேசங்களில் போதை வஸ்து என்றாக செயற்படுகின்றது.
இந்த வேறுபாடுகளை நான் தமிழ் பேசும் ஒருவராக வடக்கு கிழக்கு நிலமைகளை தென் இலங்கையுடன் ஒப்பிட்டு நோக்குதவதற்கு நந்நனவின் புலனாய்வு ஆவணப் புத்தகம் நிறையவே உதவி இருக்கின்றது.
அதனால் இந்த புத்தகம் சிறப்புப் பெறுகின்றது
கூடவே எனக்கு முன்பு உரையாற்றி தேவராஜ ஒரு முக்கியமான கேள்விவை எழுப்பினார்.
தனது 1983 கலவரம் பற்றி தனது சொந்த அனுபவத்தில் இருந்து இது மிகவும் வலிமையான கேளிவிதான்
‘…பதுளையில் நேற்றுவரை ஒன்றாக இருந்து சகோதர்களாக வாழ்ந்த நாங்கள்(தமிழர் சிங்களவர்) எப்படி ஒரு நாளில் வெறுக்கப்பட்டவர்களாக வேண்டப்படாதவர்களாக சிங்கள வெறியர்களால் அடித்து விரட்டப்பட்டோம்… கொலை செய்யப்பட்டோம்… அகதிகளாக்கப்பட்டோம்… 1983 ஆடிக் கலவரத்தில்….?
தாக்கப்பட்டோம் அகதிகள் ஆக்கப்பட்டோம் அச்சுறுத்தப்பட்டோம் என்றாக… அவர் பிறந்து வளர்ந்து தவழ்ந்து ஆடி ஓடிய ஊரான பதுளை பற்றி அவர் வருத்த்துடன் பதிவு செய்தார் இந்த வலி மலையக மக்களின் பொதுவான உணர்வலைகளாக அன்றும் இன்றும் எம் முன்னே நிற்கின்றது
இந்த பேச்சு எனக்குள் அவரைப் போலவே கேள்வியை எழுப்பியது
அத்துடன் ‘நேற்று’ வரை ஈழவிடுதலைப் போராளிகள் என்றாக ஒன்றாக தெருக்களில் கிராமங்களில் மக்களுக்காக போராடியவர்களை எவ்வாறு 1986 மே மாதத்தில் ஒரு நாளில் கொன்று குவிக்க எம்மிடம் இருந்த புலிகளால் முடிந்தது. அதனை பொது மக்கள் மௌனமாக இருந்து அனுமதித்தனர் …? இதற்கு அவர்கள் அவர்களின் துப்பாக்கிகளுக்கு பயந்தோம் என்றார்கள்
இது இதே வருடம் டிசம்பர் மாதம் வரை பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் ஐ அழிக்கும் வரை தொடர்ந்தது.
அது பின்பு நிரந்தர தடை என்றாக மாறி ஏனைய அனைத்து இயக்கங்களின் விடுதலைப் போராளிகளை தமிழ் பிரதேசத்திற்கு வெளியேற்றி அகதிகளாக்கியது.
அவர்களின் ஈழ மக்களுக்கான விடுதலை அரசியலை செய்வதற்கு தடை செய்து ஒரு முனை அரசியலை மட்டும் ஏக தலமையாக ஆக்கிக் கொண்டு மாற்றுக் கருத்துகள் பாசிச செயற்பாடுகளால ஒடுக்கப்பட்டன
அழிக்கப்பட்டன.
இதன் போது எந்த பொதுமகளும் அவர்களும் எமது பிள்ளைகள் பலர் ஒரே குடும்பத்தில் பிறந்த அல்லது ஓரே கிராமத்தில் பிறந்த உறவுகளாக ஒரே மொழி பேசியவர்களாக இருந்த போதும் டது;து நிறுத்த முடியாத அளவிற்கு அந்த துப்பாக்கிகள் தமது வேட்டுக்களைத் தீர்த்தும் கொண்டன.
இந் நிலையில்தான் எம் சமூகம் தமிழ் பேசும் சமூகம் ஐக்கியமாக இருந்தலில் இருந்து உடைந்து பல கூறுகளாக மாறி பலவீனமடைத் தொடங்கியது
இங்கு எங்கு போனது நியாங்கள் தர்மங்கள் சமூக நீதிகள்
இது போலத்தான் யாழ்ப்பாணத்தை விட்டு இனசுத்திகரிப்பாக வெளியேற்றிய முஸ்லீம் மக்கள் விடயத்திலும் நடைபெற்றது
தேவராஜாவின் உணர்வுகள்தான் ஏனைய விடுதலை அமைப்பு தமிழ் போராளிகளுக்கு முஸ்லீம்களுக்கும் அன்று ஏற்பட்டிருக்கும்
இங்கு தேவராஜாவின் உணர்வுகள் கேள்விகள் நியாயமானவை அது போலத்தான் நாம் எனையவற்றையும் பார்த்ததாக வேண்டும்
இவற்றில் இருந்த விடுபடுவதற்கான தெளிவை உந்துதலை நந்தனவின் புத்தகம் எமக்கு தந்திருக்கின்றது
இவற்றை நாம் பாடங்களாக கொண்டு முன் நகர வேண்டி நிலையில் இருப்பதால் நந்தனவின் புத்தகம் வரலாற்றில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றுகின்றது
இந்த புத்தகத்தின் மூலம் சிங்களம் என்றாலும் அது தமிழிலும் மொழியாக்கப்பட்டு வெளியிடுவது மிகச் சிறந்து.
இந்த வேலைகளை செயற்படுத்தி மனோரஞ்சன் குழுவினருக்கு பாராட்டுகள்
நேரப் பற்றாக்குறை காரணமாக என உரையை சுருக்கிக் கொண்டாலும் இதற்கு பின் இணைப்பாக உள்ளனவற்றை நான் எனது சிற்றுரையின் உசாத் துணைகளாக பாவித்தேன். அவற்றை பின் இணைப்பாக இணைத்துள்ளேன். நன்றி
நந்தன இன் உரையிற்கு பின்னராக எனது கேள்விகளாக நான்கு கேள்விகளையும் முன்வைத்தேன்
***********************************************************************
இலங்கை அரசாங்கம் 1956 ஆம் ஆண்டில் ‘சிங்களம் மட்டும்’ (ளுinhயடய ழுடெல யுஉவ) சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு எதிராகத் தமிழ் தலைவர்கள் கொழும்பில் அமைதியான முறையில் போராடினர். கொழும்பில் தொடங்கிய வன்முறை கல்லோயா பள்ளத்தாக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குப் பரவியது. அரச வாகனங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1977 பொதுத்தேர்தலில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்தது.
இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இக்கலவரத்தில், இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர், பலர் உயிரிழந்தனர்.
மலையகத் தமிழ் மக்கள் மீதும் கடுமையான காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டு அவர்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டனர்.
யாழ்ப்பாணப் பொது நூலக 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி இரவு தொடங்கி ஜூன் 1 ஆம் திகதி அதிகாலை வரை நீடித்தது. ஐதே கட்சி ஆட்சிக்கு வந்து மாவட்ட சபை தமிழ் மக்களுக்கான தீர்வாக முன்வைத்து நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்கள் இதனை தொடரந்து யாழ் சந்தை சுன்னாகம் ஈழநாடு பத்திரியை அலுவலகம் என்றாக பலதும் எரிக்கப்பட்டன.
கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள் யாழ் பல்கலைக் கழகத்திற்கு வந்து யாழ்ப்பாணத்தின் உண்மை நிலையை அறிந்து கொழும்பில் சுவரொட்டி புகைப்படப் போராட்டங்களை நடத்தினர்.
1983 யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் போராளிகளால் 13 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து, அரச ஆதரவுடன் திட்டமிட்ட முறையில் இந்த இனப்படுகொலை அரங்கேறியது.
நிகழ்வு: 1983 ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை வாக்காளர் பட்டியல்களை வைத்துக் கொண்டு, தமிழர்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் தேடித் தேடி எரிக்கப்பட்டன.
உயிரிழப்புகள்: 3,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் அல்லது உயிருடன் எரிக்கப்பட்டனர்.
சிறைச்சாலை படுகொலை: வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
தயா ஆனந்த பியசிறி ஹேவாபத்திரன (தயாபத்திரன) என்பவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுயாதீன மாணவர் சங்கத்தின் (Independent Students’ Union – ISU) தலைவராக 1985 முதல் 1986 வரை செயல்பட்ட ஒரு முக்கிய மாணவர் தலைவர் ஆவார்.
இலங்கை மாணவர் அரசியல் வரலாற்றில் இவரது மரணம் ஒரு மிக முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
1. பின்னணியும் பல்கலைக்கழக வாழ்வும்பிறப்பிடம்: மாத்தறை, அபரெக்க என்ற இடத்தை சேர்ந்தவர்.கல்வி: மாத்தறை ராகுல கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தில் (Faculty of Science) கல்வி பயின்றார்.
2. அரசியல் நிலைப்பாடு: இவரது தலைமையிலான சுயாதீன மாணவர் சங்கம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை கொள்கை ரீதியாக அங்கீகரித்தது. இது அக்காலத்தில் தீவிரமாகச் செயல்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் ஜாதிக சிந்தனய (Sinhala Nationalism) ஆகிய அமைப்புகளின் கொள்கைகளுக்கு முரணாக இருந்தது.
3. கடத்தலும் படுகொலையும்நாள்: 1986 டிசம்பர் 15 அன்று இவர் படுகொலை செய்யப்பட்டார்.சம்பவம்: ஒரு போலிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட தயாபத்திரன மற்றும் அவரது நெருங்கிய தோழரான சோமசிறி புஞ்சிராலா ஆகியோர் ஒரு ஆயுதக் குழுவினால் கடத்தப்பட்டனர்.பாணந்துறை – பிலியந்தலை வீதியில் ஹிரண படகுத்துறைக்கு அருகில் வைத்து தயாபத்திரன சித்திரவதை செய்யப்பட்டு, கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் கடத்தப்பட்ட சோமசிறி புஞ்சிராலா படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
4. வரலாற்று முக்கியத்துவம்இலங்கையின் அரசியல் மற்றும் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களின்படி, தயாபத்திரனவின் படுகொலையே இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த முதலாவது அரசியல் ரீதியான மாணவர் தலைவர் படுகொலை (First Political Student Leader Assassination in Sri Lanka) ஆகும்.
5. இந்த படுகொலைச் சம்பவமே 1987-1989 காலப்பகுதியில் இலங்கையின் தெற்கில் ஏற்பட்ட கடுமையான ஜே.வி.பி (JVP) ஆயுதக் கிளர்ச்சி மற்றும் வன்முறைகளின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது
ஐக்கிய தேசியக் கட்சி (UNP – United National Party) என்பது இலங்கையின் மிகப்பழமையான மற்றும் மிக முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.
வலதுசாரி மற்றும் தாராளவாத முதலாளித்துவக் கொள்கைகளைக் கொண்ட இக்கட்சி, சுதந்திர இலங்கையின் அரசியல் பாதையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.இக்கட்சியின்
வரலாற்றுப் பயணம் கீழே உள்ள முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. தோற்றம் மற்றும் ஆரம்ப காலம் (1946 – 1956)கட்சி தொடக்கம்: 1946 செப்டம்பர் 6 அன்று டி. எஸ். சேனநாயக்க என்பவரால் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை தேசிய காங்கிரஸ், சிங்கள மகாசபை மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இணைந்து இக்கட்சியை உருவாக்கின.
2. முதல் அரசாங்கம்: 1948 இல் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது, ஐதேகவின் தலைவரான டி. எஸ். சேனநாயக்க சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரானார்.
3. யானைச் சின்னம்: கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை ‘யானை’ சின்னமே இதன் அடையாளமாக இருந்து வருகிறது.
4. ஆரம்பகாலப் பிளவு: 1951 ஆம் ஆண்டில் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க கொள்கை முரண்பாடு காரணமாகக் கட்சியிலிருந்து விலகி, ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி’ (SLFP) என்ற மாற்று அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.
5. 2. ஜே. ஆர். ஜெயவர்த்தன காலம் மற்றும் பொருளாதார மாற்றம் (1977 – 1989)வரலாற்று வெற்றி: 1970 பொதுத்தேர்தலில் சந்தித்த பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு, டட்லி சேனநாயக்கவின் மறைவைத் தொடர்ந்து ஜே. ஆர். ஜெயவர்த்தன கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அவரது தலைமையில், 1977 பொதுத்தேர்தலில் ஐதேக நாடாளுமன்றத்தில் 5/6 பங்கு பெரும்பான்மையுடன் வரலாற்றுப் பெருவெற்றி பெற்றது.புதிய அரசியலமைப்பு: 1978 இல் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு, ஜே. ஆர். ஜெயவர்த்தன நாட்டின் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார்.
திறந்த பொருளாதாரம்: இக்காலகட்டத்தில் தான் இலங்கையில் ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ (Open Economy) அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாட்டின் வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பை (உதாரணமாக: மகாவலி திட்டம், ஆடைத் தொழிற்சாலைகள்) வேகமாக மாற்றியமைத்தது.
நெருக்கடிகள்: இதே சகாப்தத்தில் தான் இன முரண்பாடுகள் தீவிரமடைந்து, 1983 உள்நாட்டுப் போர் வெடிக்கக் காரணமாக அமைந்தது.
3. தலைவர்களின் படுகொலைகளும் வீழ்ச்சியும் (1989 – 1994)ரணசிங்க பிரேமதாச காலம்: ஜே.ஆருக்குப் பிறகு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். இவர் அடித்தட்டு மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் (“கம்புதாவ”) மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளை கிராமப் புறங்களுக்குக் கொண்டு சென்றார்.
தலைமைத்துவ இழப்பு: 1990களின் ஆரம்பத்தில் எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பினால் லலித் தஅத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க மற்றும் 1993 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தத் தொடர் படுகொலைகள் கட்சியின் பலமான இரண்டாம் கட்டத் தலைமுறையை அழித்து, கட்சியைப் பலவீனப்படுத்தியது.
4. ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவம் (1994 – தற்போது வரை)நீண்டகாலத் தலைமை: 1994 ஆம் ஆண்டு முதல் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
அமைதி ஒப்பந்தம் (2001 – 2004): 2001 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். இவரது காலத்தில் விடுதலைப் புலிகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாதான உடன்படிக்கை (CFA) கையெழுத்திடப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கம் (2015 – 2019): 2015 இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி, ஐதேக மீண்டும் ஆட்சியமைத்தது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்றார்
.5. தற்கால நிலை மற்றும் பிளவு (2020க்கு பின்)கட்சிப் பிளவு: 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அக்கட்சியின் பெரும்பான்மையினர் சஜித் பிரேமதாச தலைமையில் பிரிந்து ‘சமகி ஜன பலவேகய’ (SJB) என்ற புதிய கூட்டணியை உருவாக்கினர்.
தேர்தல் சரிவு: இந்த பிளவினால், 2020 தேர்தலில் ஐதேக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தை மாத்திரமே பெற்றது.
மீண்டெழுதல்: நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2022 இல் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தால் தற்காலிக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2024 வரை பதவியில் இருந்தார்.
சுருக்கமாகக் கூறின், இலங்கை வரலாற்றில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கை, நவீன உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேசத் தொடர்புகளை வலுப்படுத்துவதில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி
தோற்றம் (1951)நிறுவனர்: அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அக்கட்சியிலிருந்து விலகி, 1951 செப்டம்பர் 2 அன்று இக்கட்சியைத் தொடங்கினார்.
சின்னமும் நிறமும்: இக்கட்சியின் சின்னம் ‘கை’ ஆகும். இதன் அதிகாரப்பூர்வ நிறம் நீலம். இதனைச் சட்டத்தரணி எச்.ஸ்ரீ. நிஸங்க என்பவர் பரிந்துரைத்தார்.
ஆரம்பக் கொள்கை: மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்களை உள்ளடக்கிய பஞ்ச மகா பலவேகய (ஐந்து பெரும் சக்திகள்) என்ற கட்டமைப்பை மையமாகக் கொண்டு இக்கட்சி வளர்ந்தது.
2. பண்டாரநாயக்க காலம் (1956–1959)முதல் ஆட்சி (1956): ‘மகாஜன எக்சத் பெரமுன’ என்ற கூட்டணியுடன் இணைந்து 1956 பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பண்டாரநாயக்க பிரதமரானார்.
முக்கிய மாற்றங்கள்: இவரது ஆட்சியில் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழிச்சட்டமாக கொண்டுவரப்பட்டது. துறைமுகங்கள், பஸ் போக்குவரத்து போன்ற முக்கிய பொதுச் சேவைகள் தேசியமயமாக்கப்பட்டன.
படுகொலை (1959): 1959 செப்டம்பர் 26 அன்று பிரதமர் பண்டாரநாயக்க பௌத்த துறவி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
3. சிறிமாவோ பண்டாரநாயக்க காலம் (1960–1977)உலகின் முதல் பெண் பிரதமர் (1960): பண்டாரநாயக்கவின் மறைவுக்குப் பின் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைவராகி, 1960 தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
சோசலிசக் கொள்கைகள்: 1970–1977 காலப்பகுதியில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினார்.குடியரசு உருவாக்கம் (1972): இவரது ஆட்சியில் 1972 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, இலங்கை பிரித்தானிய அரசிடமிருந்து முழுமையாக விடுபட்டு ஒரு ‘குடியரசாக’ மாறியது.
4. சந்திரிகா மற்றும் மஹிந்த ராஜபக்ஷ காலம் (1994–2015)பொதுஜன முன்னணி ஆட்சி (1994): 17 ஆண்டுக்கால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பண்டாரநாயக்கவின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணி கூட்டணி வெற்றி பெற்றது. சந்திரிகா நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதியாக 1994 முதல் 2005 வரை பதவியில் இருந்தார்.
யுத்த வெற்றி மற்றும் மஹிந்த காலம் (2005–2015): சந்திரிகாவுக்குப் பின் இக்கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார். இவருடைய ஆட்சிக்காலத்தில் (2009 இல்) இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
6. வீழ்ச்சியும் தற்போதைய நிலையும் (2015 – இன்று வரை)மைத்திரிபால சிறிசேனவின் பிளவு (2015): 2015 ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன, கட்சியை விட்டு வெளியேறி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு ஜனாதிபதியானார். பின்னர் அவரே சுதந்திரக் கட்சியின் தலைவரானார்.
7. செல்வாக்கு சரிவு: மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ‘இலங்கை பொதுஜன பெரமுன’ (SLPP) என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்ததால், சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி பெருமளவில் சரிந்தது.
8. தற்போதைய நிலை: கடந்த சில தேர்தல்களில் இக்கட்சி தனித்து பலம் இழந்து, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அண்மைக்காலமாக உட்கட்சிப் பூசல்களினாலும், தலைமைத்துவப் போட்டிகளினாலும் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது
வடக்கு-கிழக்கு இணைப்பு இன்மை: தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிரந்தர இணைப்பை சந்திரிகா அரசு நிராகரித்தது.
LTTE-இன் நிராகரிப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இந்தத் திட்டத்தை ஒரு “ஏமாற்று வேலை” என்றும், தங்களை தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கான அரசியல் தந்திரம் என்றும் கூறி அதிகாரப்பூர்வமாக நிராகரித்தனர்.
மத்திய அரசின் மறைமுகக் கட்டுப்பாடு: பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்ற முக்கிய அதிகாரங்கள் தொடர்ந்து மத்திய அரசிடமே இருந்ததால், இது முழுமையான கூட்டாட்சி (Federal) முறை அல்ல என்ற விமர்சனமும் எழுந்தது.
இத்திட்டம் தோல்வியடைந்ததற்கான காரணங்கள்சிங்களப் பேரினவாத எதிர்ப்பு: சந்திரிகா முன்வைத்த இந்தத் தாராளமய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை, தெற்கில் இருந்த தீவிர சிங்கள தேசியவாதக் கட்சிகளும், பௌத்த மகா சங்கத்தினரும் கடுமையாக எதிர்த்தனர்.
இது நாட்டைத் துண்டு துண்டாகப் பிரித்துவிடும் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.அரசியல் ஆதரவின்மை: இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை சந்திரிகாவின் பொதுஜன முன்னணி (PA) அரசாங்கத்திற்கு இருக்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இதற்கு ஆதரவளிக்க மறுத்தது.
திட்டம் நீர்த்துப்போதல்: தென்னிலங்கை எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காக, 1995 இல் முன்வைக்கப்பட்ட அசல் திட்டம், பின்னர் 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டு அதன் வீரியம் குறைக்கப்பட்டது (Watered down).
நாடாளுமன்றத்தில் கைவிடப்படுதல்: இறுதியாக, பல்வேறு திருத்தங்களுடன் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புதிய அரசியலமைப்பு வரைவுச் சட்டமூலமாக இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்பால் அது நாடாளுமன்றத்திலேயே எரிக்கப்பட்டு, முழுமையாகக் கைவிடப்பட்டது.
சந்திரிகா பண்டாரநாயக்கவின் இந்தத் தீர்வுத் திட்டம், இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் ஒற்றையாட்சித் தன்மையைத் தாண்டி ஓரளவாவது தன்னாட்சியை வழங்க முயன்ற ஒரு முக்கியமான, ஆனால் தோல்வியடைந்த அரசியலமைப்பு முயற்சியாகக் கருதப்படுகிறது
இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத் திட்டங்கள் என்பது, தமிழர்களின் மரபுவழித் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவர்களின் மக்கள் தொகைச் செறிவை மாற்றி, நில உரிமைகளைச் சிதைப்பதற்காக அரசால் முன்னெடுக்கப்பட்ட உத்திகளாகும். விவசாய அபிவிருத்தி மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல் என்ற போர்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டங்கள், காலப்போக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் அரசியல் கருவிகளாக மாறின.இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்ட முதன்மையான குடியேற்றத் திட்டங்கள் மற்றும் நிலப் பறிப்பு முறைகளின் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
1. ஆரம்பகால குடியேற்றத் திட்டங்கள் (சுதந்திரத்திற்குப் பின்)கல்ஓயா திட்டம் (1949): சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி. எஸ். சேனநாயக்கவினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை (அன்றைய மட்டக்களப்பு மாவட்டம்) பகுதியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. காடுகள் அழிக்கப்பட்டு பெருமளவிலான சிங்கள மக்கள் அங்கு குடியேற்றப்பட்டதால், தமிழர்களின் பெரும்பான்மை பலம் குறைந்து, அம்பாறை என்ற புதிய சிங்களப் பெரும்பான்மை மாவட்டம் உருவாக இது வழிவகுத்தது.
இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவினால் (D.S. Senanayake) அம்பாறைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடியேற்றத் திட்டம் கல்லோயா குடியேற்றத் திட்டம் (Gal Oya Scheme) ஆகும். 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1953 இல் நிறைவடைந்த இத்திட்டம், சுதந்திர இலங்கையின் முதலாவது மிகப்பெரிய பல்பயன் அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனத் திட்டமாக கருதப்படுகிறது.
இத்திட்டம் பற்றிய விரிவான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்உணவு உற்பத்தி: நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்ய வறண்ட வலயத்தில் பெரும் நெல் விவசாயப் பரப்பை உருவாக்குதல்.
நிலமற்றோருக்கு காணி: ஈர வலயத்தில் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலமில்லாமல் இருந்த வறிய விவசாயக் குடும்பங்களுக்கு காணிகளை வழங்கி குடியமர்த்துதல்.
பல்பயன் அபிவிருத்தி: நீர்ப்பாசனம் வழங்குவதோடு மட்டுமல்லாமல்,
மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்வது. சேனநாயக்க சமுத்திரம் (Senanayake Samudraya)இத்திட்டத்தின் பிரதான அங்கமாக, அம்பாறையின் இங்கினியாகல பகுதியில் ஓடிய கல்லோயா ஆற்றை மறித்து ஒரு பிரம்மாண்டமான அணைக்கட்டு கட்டப்பட்டது. இதன் மூலம் உருவான நீர்த்தேக்கத்திற்கு டி. எஸ். சேனநாயக்காவின் நினைவாக சேனநாயக்க சமுத்திரம் எனப் பெயரிடப்பட்டது. இது இலங்கையின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இதன் மூலம் 1,20,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு நீர் வழங்க வழிவகை செய்யப்பட்டது.
நிர்வாக அமைப்புஇத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக 1949 ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் கல்லோயா அபிவிருத்திச் சபை (Gal Oya Development Board – GODB) உருவாக்கப்பட்டது. இச்சபைக்கு அப்பிரதேசத்தின் காணி விநியோகம், விவசாயம், மின்சாரம் மற்றும் சிவில் நிர்வாகம் போன்ற அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன.
அரசியல் மற்றும் இனரீதியான தாக்கங்கள் (விமர்சனங்கள்)இத்திட்டம் இலங்கையின் வரலாற்றில் மற்றும் இன உறவுகளில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது:
மக்கள்தொகை மாற்றம் (Demographic Change): ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்கள் (தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்) பெரும்பான்மையாக வாழ்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே அம்பாறை இருந்தது.
ஆனால், இக்குடியேற்றத் திட்டத்தின் மூலம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் இங்கு கொண்டுவந்து குடியேற்றப்பட்டனர்.
புதிய மாவட்டம் உருவாக்கம்: இக்குடியேற்றங்களின் விளைவாக ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றத்தை அடுத்து, 1960 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து பிரிக்கப்பட்டு ‘அம்பாறை’ என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இன முரண்பாடுகள்: இத்திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழ் அரசியல் தலைமைகளின் கடும் எதிர்ப்புக்குள்ளாகின. இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக விமர்சிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 1956 ஆம் ஆண்டு இப்பகுதியில் முதலாவது பெரிய இனக்கலவரமும் வெடித்தது.
டி. எஸ். சேனநாயக்காவின் இந்த அம்பாறைக் குடியேற்றத் திட்டம் நாட்டின் விவசாயத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய அதேவேளை, இலங்கையின் இனப் பிரச்சினை மற்றும் எல்லைக் குடியேற்ற அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாயும் கல்லோயா (புயட ழுலய) ஆற்றின் பழைய தமிழ் பெயர் பட்டிப்பளை ஆறு ஆகும்.
மேலும், பண்டைய வரலாற்று மற்றும் இலக்கியக் குறிப்புகளின்படி இந்த ஆற்றின் பிற பழைய பெயர்கள் பின்வருமாறு: கல்க நதி / கத நதி (Gatha Nadee): மகாவம்சம் போன்ற பண்டைய வரலாற்று நூல்களில் இந்த ஆறு பாலி/சிங்கள மரபில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லாறு: உள்ளூர் தமிழ் மக்களால் இது ‘கல்லாறு’ என்றும் அழைக்கப்பட்டது. ‘கல் ஓயா’ (Gal Oya) என்ற சிங்களப் பெயரும் “பாறைகளைக் கொண்ட ஆறு” (River of Rocks) என்ற பொருளிலேயே உருவானது.
2. சேருவாவலை உருவாக்கம் கந்தளாய் மற்றும் அல்லாரை திட்டங்கள்: திருகோணமலை மாவட்டத்தில் பாரம்பரிய தமிழ் கிராமங்களைச் சூழ சிங்கள உழவர்கள் குடியேற்றப்பட்டனர்.2. பாரிய நீர்ப்பாசன மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள்மகாவலி அபிவிருத்தித் திட்டம்: இலங்கையின் மிகப்பெரிய நதித் திருப்பல் திட்டமான இதன் கீழ், குறிப்பாக மகாவலி ‘டு’ வலயம் (முல்லைத்தீவு, வவுனியா எல்லைகள்) மற்றும் மகாவலி ‘டீ’ வலயம் (மட்டக்களப்பு) ஆகியவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான சிங்கள குடும்பங்கள் தமிழ் நிலங்களில் குடியேற்றப்பட்டனர்.
3. கிவுல் ஓயா மற்றும் மணலாறு (வெலிஓயா) திட்டம்: முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களை இணைத்து ‘வெலிஓயா’ என்ற சிங்கள நிர்வாக அலகு உருவாக்கப்பட்டது.
இது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழர்களின் புவியியல் தொடர்ச்சியைத் துண்டிப்பதை நோக்கமாகக் கொண்டது.
4. போருக்குப் பிந்தைய நவீன நிலப் பறிப்பு முறைகள் (2009 இற்குப் பின்)2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், ஆயுதக் குடியேற்றங்களுக்குப் பதிலாகப் பல்வேறு அரச திணைக்களங்கள் மூலமாக நுட்பமான முறையில் நிலப் பறிப்புகள் முடுக்கப்பட்டுள்ளன.
தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்பு (டீரனனாணையவழைn): தமிழர்களின் பூர்வீக இந்து வழிபாட்டுத் தலங்கள் அல்லது பொது நிலங்கள், “பண்டைய பௌத்த அடையாளங்கள்” இருப்பதாகக் கூறி தொல்பொருள் மையங்களாக அறிவிக்கப்படுகின்றன. உதாரணமாக, முல்லைத்தீவின் குரூந்தி மலை மற்றும் திருகோணமலையின் பல பகுதிகள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம்: தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் கால்நடை மேய்ச்சல் தரைகள் (உதாரணமாக: மட்டக்களப்பு மாதவணை, மயிலத்தமடு பகுதிகள்) திடீரெனப் பாதுகாக்கப்பட்ட காடுகளாகவோ அல்லது வனவிலங்கு வலயங்களாகவோ பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது.
உயர் பாதுகாப்பு வலயங்கள் (High-Security Zones): போர்க்காலத்தில் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வளமான பொது மற்றும் தனியார் நிலங்கள், போர் முடிந்த பின்னரும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன.
திட்டங்களின் முதன்மை நோக்கங்கள்குடிப்பரம்பலை மாற்றுதல் (Demographic Change): வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் மக்கள் தொகை சதவீதத்தைக் குறைத்து, சிங்களப் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்ற மற்றும் உள்ளூர் தேர்தல் தொகுதிகளில் அதிகரிப்பது.
தாயகக் கோட்பாட்டைச் சிதைத்தல்: தமிழர்கள் கோரும் வடக்கு – கிழக்கு இணைந்த ‘பூர்வீக தாயகம்’ என்ற புவியியல் ஒருமைப்பாட்டை, இடைநடுவே சிங்களக் குடியேற்ற கிராமங்களை உருவாக்குவதன் மூலம் உடைப்பது.
வளங்கள் மற்றும் வாழ்வாதாரக் கட்டுப்பாடு: வளமான விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பொருளாதாரத் தற்சார்பை நசுக்குவது.
தமிழ் கட்சிகளுக்கும் ஐதே கட்சியிற்குமான உறவு
இலங்கை அரசியலில் தமிழ் கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) இடையிலான உறவு என்பது கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, ஒத்துழைப்பு மற்றும் கடுமையான அரசியல் முரண்பாடுகள் நிறைந்த ஒரு சிக்கலான வரலாற்றைக் கொண்டது.
அரசியல் நகர்வுகள், வரலாற்றுத் திருப்பங்களின் அடிப்படையில் இந்த உறவின் முக்கிய கட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்பகாலக் கட்டம் (1947 – 1956)ஆரம்பகால கூட்டணிகள்: ஐக்கிய தேசியக் கட்சி 1946 இல் தோற்றுவிக்கப்பட்டபோது, அதில் ஆரம்ப காலத் தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் இணைந்திருந்தனர்.
2. 1947 இல் டி.எஸ். சேனநாயக்க தலைமையில் அமைந்த முதல் ஐ.தே.க அரசாங்கத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (ACTC) தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அமைச்சராக இணைந்தார்.
3. முதலாவது பிளவு: ஐ.தே.க அரசு கொண்டுவந்த ‘இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் (1948)’ மூலம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதற்கு தமிழ் காங்கிரஸ் ஆதரவளித்ததால், அதிருப்தியடைந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கட்சியை விட்டு வெளியேறி, 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஃபெடரல் கட்சி) ஆரம்பித்தார்.
இது தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாகும்.
2. ஒப்பந்தங்களும் தேசிய அரசாங்கமும் (1960 – 1970)டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தம் (1965): 1965 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எந்தவொரு சிங்களக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசுக்கு தமிழரசுக் கட்சி (14 இடங்கள்) ஆதரவளித்தது.
இதன்போது தமிழர்களின் பிராந்திய சுயாட்சி மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் “டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தம்” கையெழுத்தானது.
எனினும், தென்னிலங்கையின் தீவிர சிங்களப் பேரினவாத எதிர்ப்புக் காரணமாக ஐ.தே.க இந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த தமிழ் கட்சிகள் 1969 இல் அரசாங்கத்திலிருந்து விலகின.
4. ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் மற்றும் இனக்கலவரங்கள் (1977 – 1989)கடுமையான விரிசல்: 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஐ.தே.க ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
இக்காலகட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (வுருடுகு) நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
கருப்பு ஜூலை (1983): ஐ.தே.க ஆட்சியின் கீழ் 1983 இல் நடந்த திட்டமிட்ட கொடூரமான ‘கருப்பு ஜூலை’ தமிழ் இனப்படுகொலை மற்றும் ஆறாம் அரசியல் சாசனத் திருத்தம் (தனிநாடு கோரிக்கையைத் தடை செய்தல்) ஆகியவை தமிழ் கட்சிகளுக்கும் ஐ.தே.க-வுக்குமான உறவை முழுமையாக முறித்துக் கொள்ளச் செய்தன.
இது தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் தீவிரமடையக் காரணியாக அமைந்தது.
5. சமாதான முயற்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவின் காலமும் (2001 – 2019)சமாதான ஒப்பந்தம் (2002): ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (டுவுவுநு) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்தார்.
இக்காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உருவாக்கப்பட்டு, ஓரளவுக்கு மிதமான அரசியல் உறவு பேணப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கம் (2015 – 2019): 2015 இல் ஐ.தே.க (மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணி) ஆட்சியை அமைப்பதற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) நிபந்தனையற்ற மற்றும் மறைமுக ஆதரவை வழங்கியது.
புதிய அரசியலமைப்பு மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாக இருந்தது. ஆனால், இம்முயற்சிகளும் முழுமையான பலனைத் தரவில்லை.
6. சமகால அரசியல் நிலைப்பாடு (2022 – 2026)பொருளாதார நெருக்கடியும் ரணிலின் ஜனாதிபதி பதவியும் (2022 – 2024): இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான போது, தமிழ் கைதிகளின் விடுதலை, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல் மற்றும் காணி விடுவிப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகள் அவருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தின.அரசியல் மறுசீரமைப்பு: அண்மைய 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் அதற்குப் பிந்தைய அரசியல் சூழலில், பாரம்பரிய தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் ஐ.தே.க ஆகிய இரண்டுமே தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் அலைகளால் (தேசிய மக்கள் சக்தி – NPP போன்ற கட்சிகளின் எழுச்சி) கடுமையான சவால்களையும் பிளவுகளையும் எதிர்கொண்டுள்ளன.
சுருக்கமாக….. ஐக்கிய தேசியக் கட்சியானது இலங்கை சுதந்திரக் கட்சியை (ளுடுகுP) விட தாராளவாத மற்றும் பொருளாதாரக் ரீதியாக மேற்குலகிற்குச் சார்பான அணுகுமுறையைக் கொண்டிருப்பதால், தமிழ் கட்சிகள் வரலாற்று ரீதியாகப் பேச்சுவார்த்தைகளுக்கும் உடன்பாடுகளுக்கும் இதனுடன் இணங்கிச் சென்றன.
எனினும், தென்னிலங்கை பெரும்பான்மைவாத அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஐ.தே.க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை, தமிழ் கட்சிகள் மத்தியில் ஐ.தே.க மீதான நம்பிக்கையீனத்தையே நீண்டகாலப் போக்காக மாற்றியுள்ளது.
வரலாறு முழுவதும் தமிழ் குறும் தேசியவாதக் கட்சிகள் ஐ. தேசிய கட்சியின் வலதுசாரி செயற்பாடுகளுடன் கை கோர்த்து பயணித்ததை கூற முடியும்
ஜே.ஆரினால் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக களம் இறக்கப்பட்ட சிறில் மத்தியூ தமிழ் பேசும் மாணவர்களின் உயர்கல்வியான பல்கலைக கழகத் தெரிவில் காட்டி வந்த மோசமாக பாகுபாடான தரப்படுத்தையும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகும்
தமிழ் மாணவரகள் முறையற்ற முறையில் பல்கலைக கழகங்களுக்கு குதிரை ஓடி வந்தவர்கள் என்றாக அன்றைய கால கட்டத்தில் பிரதானமாக கொதி நிலையில் இருந்ததை பாராளுமன்றதில் அதிகம் தமிழ் பேசும் மக்கள் மாணவர்களுக்கு எதிராக இனவாதம் கக்கி வந்தார்
ஜேஆரின் 5/6 பெரும்பான்மையுடனான தேர்தல் வெற்றியும் சமகாலத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தமிழ் ஈழக் கோரிக்கை என்றாக தனிநாட்டு வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை 1970 தேர்தலில் அவர்கள் பெற்ற முக்கிய தலைவர்களின் தேர்தல் தோல்வியில் இருந்து மீள்வதற்காக பயன்படுத்திய கோசத்தின் அடிப்படையில் சிறிலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றத்தில் கடுமையான தோல்வியை தொடரந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்கட்சித் தலைவராக அப்பாபிள்ளை அமிர்தலிங்க வருவதற்கு வாய்பை ஏற்படுத்தியது
இதனைத் தொடர்ந்து குறகிய காலத்தில் ஜேஆர் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்;வாக மாவட்ட சபை என்பதாக முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடனான வலதுசாரி சிந்தனை உடன்பாட்டிற்கு வந்து அதனை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏற்றுக் கொண்டது.
தனிநாடு தமிழ் ஈழம் என்றான ஆதர்தலுக்கு முன்னரான உசுப்பேத்திலில் இருந்து தேர்தல் வெற்றியிற்கு பிறகு சடுதியாக வலதுசாரி ஐதே கட்சியுடன் சமரசம் ஆகி ஏற்றுக் கொண்ட மாவட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது
இதில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமிழ் பேசும் மக்களிடம் பெற்ற தேர்தல் வெற்றி ஆணையை கடாசி மக்களின் உணர்வுகளை ஆணையை நிராகரித்த போது இதனைக் கண்டித்து யாழ் பல்கலைக் கழ மாணவர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர்.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிற்காக 1977 தேர்தலின் போது தமது பல்கலைக கழக வகுப்புகளை ஒரு கிழமை பகிஸ்கரித்து ஆதரவு பிரச்சாரம் என்றான எல்லா விடயங்களையும் புறம் தள்ளி ஜேஆரின் வலையிற்கு தாமாகவே வீழ்ந்ததை கண்டித்து இந்த போராட்டத்தின் போது யாழ் பலகலைக கழக மாணவர்கள் தமது எதிர்பின் போது தெரிவித்தனர்
போராட்டத்தின் இறுதியில் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவியும் யாழ் பல்கலைக் கழக மாணவர்களால் எரிக்கப்பட்து.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அதன் இளைஞர் அணியான தமிழ் இளைஞர் பேரவையும் இணைந்து யாழ் பல்கலைக கழக மாணர்களுக்கு எதிராக யாழ் பல்கலைக் கழத்திற்கு முன்பாக அமைந்த குமாரசமி வீதியில் ஒரு பொது கூட்டத்தை நடாத்தினர்.
இதில் பேசிய பலரும் யாழ் பல்கலைக கழக(த்தை) மாணவர்களை சுட்டிக் காட்டி உங்கு கல்வி கற்பவரகள் குதிரை ஓடி பல்கலைக் கழகம் வந்தவர்கள் என்று தமது உணர்சி வசப்பட்ட பேச்சை உமிழ்ந்தனர்
இது அன்றைய காலகட்டத்தில் சிறில் மத்யூ பாராளுமன்த்தில் தமிழ் பேசும் பல்கலைக் கழக மாணவரகள் முறையற்ற முறையில் குதிரை ஓடி பல்கலைக் கழகம் வந்தவர்கள் என்ற பேரினவாக வெறுப்பு பேச்சை ஆமோதிப்பது போல் ஒன்றாக இருந்தது
சந்திரிகா அம்மையார் கொண்டு வந்த இதுவரை இலங்கை வரலாற்றில் முன்மொழியப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் ரணில் தலமையில் பாராளுமன்றத்தில் கொழுத்தி தமது எதிர்பை பேரினவாதத்தை காட்டிய போது இதில் தமிழ் தேசியக் கூட்மைப்பும் இணைந்து கொண்டது
இதற்கு முதல்நாள் சந்திரிகாவிற்கும் தமிழ் தேசியக் கூட்மைப்பு சம்மந்தரின் தலமையிலான அக்கட்சியினருக்கும் இடையிலான தீர்வுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்பதில் உடன்பட்டு வாக்குறதி கொடுத்துவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சியின் தமிழ் தேசிய ஆணையாளரின் சொல் கேட்டு மீண்டும் வரலாற்றில் ஐதேசிய கட்சியான வலதுசாரிகளிடம் சேர்ந்து அந்த நகல் எரிப்பில் ஈடுபட்டு தமது எதிர்ப்பு என்றாக வரலாற்று துரோகத்தை தவறை ஐதேசிய கட்சியின் வலதுசாரித்தனத்தை தொடர்ந்ததே தமிழ் குறும் தேசியவாதிகளின் வரலாறு
1980 களில் ஈழவிடுதலை அமைப்புகளின் இடதுசாரிச் செயற்பாடுகளை ‘….சில தம்பிமார் சில சிவப்பு புத்தகங்கள படித்துவிட்டு தமக்கு எதிராக செயற்படுவதாக…..’ தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி பேசியதுதில் ஈரம்பித்து இன்றுவரை இது தொடர்கின்றது வேறு வேறு வடிவங்களில்
1977 தேர்தலின பின்பு ஜேஆர் இலங்கையில் பலமான தொழிற்சங்கங்களின் முதுகு எலும்பை உடைத்தற்கும் இதன் மூலம் இடதுசாரி இயக்கத்தை இலங்கையில் பலவீனப்படுத்தியதும் ஒன்றான பயணங்களின் எடுத்துகாட்டாகும்
கூடவே மலையக மக்களின் குடியுரிமை என்றான விடயத்தில் மலையக மக்களின் பக்கம் நிற்காது இலங்கை பேரிவாத அரசுகளின் நாடற்றவர் என்றான நிலமையினை ஏற்படுத்தியதில் கூட ஐ தேசி கட்சியின் பக்கமே பிரதான தமிழ் பேசும் அரசியல் தரப்பு அன்று செயற்பட்டது
இறுதியாக நல்லாட்சி அரசாங்க காலத்தில் எதிர் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலும் புதிய அரசியல் அமைப்ப அமைத்து தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெறுவதில் இணக்கமாக ரணில் தலமையிலான வலதுசாரி செயற்பாட்டிற்கு முழுமையான 5 வருடங்களையும் பூர்த்தி செய்ய ஆதரவு வழங்கியது என்றாகவும் எப்போதும் ஐ தேசியக் கட்சியுடன் ஒரே சித்தாந்தம் சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டனர்.
2009 யுத்தம் முடிவுற்ற பின்பும் இந்த யுத்த்தின் தலமை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க ஆசீர்வாத்துடன் ஐதேசி கட்சி நிறுத்திய போது முள்ளிவாய்கால வரை சென்று தமிழர்களை இனவழிப்பு செய்த அவரை ஆதரித்தது என்பதில் கூட தமிழ் குறம் தேசியம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றாக வலதுசாரி ஐ. தேசிய கட்சியின் பக்கமே நின்றது
இவ்வாறு பல உதாரணங்களை இலங்கையின் சுதந்திரத்தற்கு பின்னரான வரலாற்றில் பலவற்றையும் நாம் காட்ட முடியும்