தோழர் பிரிட்டோ

தமிழக இளைஞர்களும் அரசியல் கட்சிகளும் தத்தம் அரசியல் நிலைப்பாட்டிற்கமைய இயக்கங்களுக்கு ஆதரவளித்துடன் சில இளைஞர்கள் முழு நேர ஆதரவாளர்களாக செயற்பட்டனர் .

இடதுசாரி கொள்கையைப் பின்பற்றிய இளைஞர்கள் ஈபிஆர்எல்எப் மற்றும் ஈரோஸ் அமைப்பிற்கு அதரவளிக்கலாயினர். அவ்வாறு ஆதரவளித்தவர்களில் சிலர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாது முழுநேர ஆதரவாளர்களாக செயற்பட்டனர் .

அவ்வாறு செயற்பட்டவர்களில் நேற்று காலை அகால மரணமடைந்த தோழர் பிரிட்டோ ஈபிஆர்எல்எப் பின் மிக நெருங்கிய ஆதரவாளராவார் சென்னை குருநானாக் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றிய ஜோன் பிரிட்டோ.

இடதுசாரி கொள்கையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் தோழர் பத்மநாபாவினால் கவரப்பட்டு ஈபிஆர்எல்எப்பின் ஆதரவாளராக மாறினார் .

குருநானாக் கல்லூரியில் இருந்து விலகி இரசாயனப் பொருட்களை விற்பனை செய்துக் கொண்டு ஈபிஆர்எல்எப்பின் அதரவாளராக செயற்பட்ட பிரிட்டோ இயக்கம் முறிவுற்றப் பின்னரும் ஈபிஆர்எல்எப் தோழர்களுடன் உறவினைப் பேணி வந்தார்.

இந்திய, இலங்கை மற்றும் சர்வதேசிய அரசியல் செல்நெறகை ஆழ்ந்த அறிவினைக் கொண்டவரார்.

இலங்கையின் அரசியல் செல்நெறிகைப்பற்றி ஆழ்ந்த அறிவினைக் கொண்டருந்தார்.

தன் வாழ்நாளில் எதையும் எதிர்பார்க்காத ஈழப்போராட்டம் இயங்கங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்ட போது வாழ்கையின் எதிர்பார்ப்பு முறிவுற்றது எனக் கூறியவராவார்.

பத்மநாபா கொலைக்குப்பின்னர் மனமுடைந்து ஈழப் போராட்டம் முடிவினை நோக்கி நகர்கின்றது என்றார். அவரது கூற்று நிஜமாகியது

Leave a Reply