உண்மை என்னவென்றால், ஆரம்பகாலத்தில் மேற்கத்திய மற்றும் இந்திய உளவு அமைப்புகளின் நிதியுதவி, ஆயுதப் பலம் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவின் பிராந்திய ஆதிக்க நலன்களுக்காகவும் அதன் நாசகாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும் கூலிப்படையாகச் செயற்பட்டவர்கள் தங்களை விடுதலைப் போராளிகள் என்று கூறிக்கொண்டவர்கள்தான்.
தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் புறப்பட்டதாகக் கூறிக்கொண்டு, உணர்வுமிக்க தமிழ் இளைஞர்களைத் திசைதிருப்பி, தவறான சித்தாந்தங்களை ஊட்டி, பிற இன மக்கள் மீது இனவெறியைக் கக்கி காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்த கொடூர வரலாறு இன்றும் கண்முன்னே உள்ளது.
1980-களில் இலங்கை அரசை இந்தியாவின் கட்டளைக்குப் பணியவைப்பதற்காக, இந்தியாவின் உளவுத்துறையான ரோவின் நாசகாரத் திட்டங்களுக்கும், பாரிய படுகொலைகளுக்கும், கொடூர குண்டுவெடிப்புக்களுக்கும் செயல்வடிவம் கொடுத்தவர்கள்தான் இன்று சிலரால் புனிதர்களாகக் கொண்டாடப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பினர்.
1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாகும். அன்றைய தினம் அனுராதபுரத்தில் அரங்கேறிய கொடூரத் தாக்குதல், சிங்கள மக்கள் மீது எம் இனவிடுதலைக்காக போராடப் புறப்பட்ட விடுதலைப்புலிகள் நடத்திய மாபெரும் இனப் படுகொலை.
தமிழ் பெரும்பான்மை அல்லாத ஒரு பகுதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட முதல் பெரிய நேரடித் தாக்குதல் இதுவாகும்.
இத்தாக்குதலை நேரடியாக உத்தரவிட்டவர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார்.
மன்னார் தளபதி விக்டர் (இயற்பெயர்: மார்சலின் புசெலுஸ்) என்பவரிடம் இத்தாக்குதல் ஒப்படைக்கப்பட்டு, அவரது கீழிருந்த கனகசபாபதி ஹரிச்சந்திரா என்ற ராதா என்பவரால் இது செயல்படுத்தப்பட்டது.
பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் இலங்கை ராணுவம் 70 தமிழர்களை கொன்றதற்குக் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் புலிகள் பின்னர் வாதிட்டனர்.
ஆனால், 1988-ல், இந்திய உளவு அமைப்பான ‘RAW’ அமைப்பின் நேரடி வழிகாட்டுதலின் பேரில்தான் இந்த அனுராதபுரம் படுகொலை திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பதைப் புலிகளே ஒப்புக்கொண்டனர்.
மே 14 அன்று பேருந்து ஒன்றைக் கடத்திச் சென்ற புலிகள், அனுராதபுரத்திற்குள் நுழைந்தனர். பிரதான பேருந்து நிலையத்திற்குச் சென்ற விடுதலைப்புலிகள், பேருந்துகளுக்காகக் காத்துக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தானியங்கித் துப்பாக்கிகளால் சுட்டனர்.
இதன்பின்னர் ஸ்ரீ மகா போதி விகாரைக்குச் சென்று, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பௌத்த துறவிகள், பிக்குகள் மற்றும் அங்கிருந்த சாதாரணக் குடிமக்கள் மீது சுட்டுக் கொன்றனர். முதியவர்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என மொத்தம் 146 சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியில் வில்பத்து தேசிய பூங்காவிற்குள் நுழைந்த அவர்கள், பூங்கா காப்பாளர் ஆபிரகாம் என்பவரைப் பிணைக்கைதியாகப் பிடித்துவிட்டு, வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தின் 24 ஊழியர்களை வரிசையாக நிறுத்திச் சுட்டுக் கொன்றனர். இவர்களில் ஒரே ஒருவரே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனுராதபுர நகரில் இனக்கலவரம் வெடித்தது. ஆத்திரமடைந்த சிங்களக் கும்பல் தமிழர்களின் 8 கடைகளை எரித்துக் கொள்ளையடித்தது. கதிரேசன் இந்துக் கோயிலும் பல தமிழ் வீடுகளும் எரிக்கப்பட்டன. 15 முதல் 20 தமிழ் மக்கள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர்.
அடுத்த நாளும் வன்மைகள் தொடர்ந்தன; ராணுவ முகாமில் தஞ்சம் புகுந்த 9 தமிழ் மக்களை ஆத்திரமடைந்த ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றார். அந்த இரண்டு நாட்களில் மட்டும் 75 தமிழ் அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். இந்த அனைத்து உயிரிழப்புகளுக்கும் புலிகளின் கண்மூடித்தனமான பயங்கரவாதச் செயல்தான் மூலக்காரணம்.
அத்துடன் எமது விடுதலைக்காக போராடப புறப்பட்ட விடுதலைப் புலிகள் நின்றுவிடவில்லை,
1987 ஆம் ஆண்டு தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், அதனைச் சீர்குலைக்கப் புலிகள் திட்டமிட்டனர்.
போர்நிறுத்த உடன்படிக்கையை முறியடிக்கத் திருகோணமலையிலிருந்து புலேந்திரன் என்பவனுக்குத் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவு பிரபாகரன் மூலமாக பிறப்பிக்கப்பட்டது.
ஏப்ரல் 17, 1987 (ஒரு புனித வெள்ளி மற்றும் புத்தாண்டுக்கு முந்திய வாரம்) அன்று, இந்தியா ஆதரவளித்த சமாதானத் தீர்வை விவாதிக்கப் புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர இலங்கை அரசு ஒரு தரப்பு போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது.
அதை இந்தியா விரும்பவில்லை. தங்களின் தீர்வுத்திட்டத்திற்கு இலங்கை பணிய வேண்டும் என இந்தியா திட்டம் தீட்டியது.
திருகோணமலையிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மற்றும் எதிர்த்திசையில் வந்த வாகனங்கள், திருகோணமலை – ஹபரணை நெடுஞ்சாலையில் கித்துலவத்த பகுதிக்கும் 123-129 மைல் கற்களுக்கும் இடைப்பட்ட ஆள் அரவமற்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
சீருடைகளில் நின்ற ஆயுதமேந்திய புலிகள் பேருந்துகளை மறித்து, பயணிகளை கீழே இறங்குமாறு உத்தரவிட்டனர். அவர்களின் விலைமதிப்பற்ற நகைகளைக் கொள்ளையடித்ததுடன், அவர்களை வரிசையாக நிறுத்தித் தடிகளால் கொடூரமாகத் தாக்கிய பின்னர் தானியங்கித் துப்பாக்கிகளால் சுட்டும் வாள்களால் வெட்டியும் கொன்றனர்.
சம்பவ இடத்திலேயே 107 பொதுமக்கள் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட) கொல்லப்பட்டனர். பேருந்துகளுக்குள் பயத்தால் பதுங்கியிருந்தவர்களும் விடப்படவில்லை. உள்ளே ஏறி வயது வேறுபாடு இன்றி அனைவரையும் சுட்டுத்தள்ளினர்.
பலியானவர்களில் விடுமுறை முடிந்து வீடு திரும்பிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 வீரர்களும் அடங்குவர். மொத்தமாக 127 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 64 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் மிகவும் கொடூரமான விடயம் தலமை தாங்கிச்சென்ற புலேந்திரன் தனது கைகளால் பெண்களையும், குழந்தைகளை சரமாரியாக வெட்டிக் கொன்றான், பிஞ்சு குழந்தைகளை காலில் பிடித்து தூக்கி மரத்தில் அடித்து கொன்றான் என அன்றைய காலகட்டத்தில் வீரதீரமாக பேசப்பட்ட உண்மைகளில் ஒன்று.
இந்தத் தாக்குதல் நடந்து வெறும் நான்கு (21 April 1987 )நாட்களுக்குப் பிறகு, கொழும்பு Pettah என அழைக்கப்படும் புறக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு காரில் பாரிய குண்டுவெடிக்கச் செய்து 113 பொதுமக்களைக் கொன்றுகுவித்தனர்.
அன்றைய அதே தினத்தில் ஜெயந்திபுர கிராமத்திற்குள் நுழைந்த புலிகள், அங்கு தூங்கிக்கொண்டிருந்த 5 ஆண்கள், 5 பெண்கள், 4 இளம் சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என 15 அப்பாவி மக்களை வெட்டிக் கொன்றனர்.
இவ்வாறு 1987 ஏப்ரல் மாதத்தில் மட்டும் பொலன்னறுவை மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் அம்பகஸ்வெவ, மீகஸ்வெவ, கடவத்தமதுவ உள்ளிட்ட கிராமங்களில் தாக்குதல்களை நடத்தி 225-க்கும் மேற்பட்ட பொதுமக்களை புலிகள் கொன்று குவித்தனர்.
இந்தத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியவன் புலிகளின் பிரதேசத் தளபதி புலேந்திரன் என்பவனே.
மற்ற இயக்கங்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்று குறைகூறும் போலிப் புலிகள், மற்றும் புலிகளின் அடிவருடிகள் உண்மையில் தாங்கள்தான் இந்தியாவின் ‘ரோ’ (RAW) அமைப்பின் நேரடிக் கைக்கூலிகளாகச் செயற்பட்டு, அப்பாவிச் சிங்கள மக்களை ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தனர் என்ற உண்மையை எவராலும் மறைக்க முடியாது.
இலங்கையை இந்தியாவின் கட்டளைக்குப் பணியவைக்கும் ஒரே நோக்கத்திற்காகக் கூலிப்படையாக மாறி, சிங்களச் சகோதரர்களை வேட்டையாடிய புலேந்திரனும், விக்டரும் கொடூரமான பயங்கரவாதிகள் என்பது இந்த புலி அடிவருடிகளுக்கு எப்போதும் விளங்கப்போவதுமில்லை.
‘விடுதலை’ என்ற புனித இலட்சியத்திற்காகப் போராடப் புறப்பட்டு, அந்நிய கயவர்களின் கூலிப்படையாக மாறி, தமிழ் மக்களின் பெயரால் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களை ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்யத் தொடங்கினார்களோ, அன்றே அவர்களின் அழிவும் உறுதியானதுடன், இந்தப் போராட்டத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமானது.
முக்கிய குறிப்பு: வரலாற்றின் பக்கங்களை மறைத்துவிட்டுத் தங்களை மட்டுமே புனிதர்களாக காட்ட முற்படும் எந்தவொரு சக்தியின் பொய்ப் பிரச்சாரங்களை மக்களிடம் நெடுநாள் மறைக்க முடியாது.
என்று புலிகள் ஒரு அந்நிய உளவமைப்புகளின் கூலிப்படையாக செயற்பட்ட ஒரு கொடூர பயங்கரவாத அமைப்பு என மக்கள் உணரத் தொடங்குகின்றனரோ அப்போது அதே மக்களே உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
வரலாறு எப்போதும் உண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப்படும்.நாளாகும். அன்றைய தினம் அனுராதபுரத்தில் அரங்கேறிய கொடூரத் தாக்குதல், சிங்கள மக்கள் மீது எம் இனவிடுதலைக்காக போராடப் புறப்பட்ட விடுதலைப்புலிகள் நடத்திய மாபெரும் இனப் படுகொலை.

வரலாறு எப்போதும் உண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப்படும்.