விமானத்தில் முன் கதவால் ஏறி பின் கதவால் இறங்கிய அமெரிக்க அதிபர்

அவர்கள் எதிர்பார்த்ததை போல் அது அமையாவிட்டதற்கு அப்பால்….

இஸ்ரேல், அமெரிக்காவிற்கு அவமானகரமான தோல்வியை கொடுத்த யுத்தமாகவே இது தொடருகின்றது.

இடையிடையே ஹோமஸ் நீரிணையைத் திறப்பது என்றாக சமாதானம் பேச்சுவார்த்தை என்றாக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் ஈரானின் தலைவரை முதல் நாளில் முதல் தாக்குதலில் பாடசாலைப் பிள்ளைகள் 150 வரை கொன்றதுடன் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த யுத்தத்தில் உலகத்திடம் உணர்வு ரீதியாக தோற்றுப் போனது.

இதற்கு பின்னராக இராணுவ ரீதியாக நவீன ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேல் பாவித்தாலும் ஈரானின் நவீனம் அதற்கு ஈடுகொடுத்து அவமானகரமாக ஆயுதங்களால் அமெரிக்காவை பின்வாங்க வைத்ததாக போய் கொண்டு இருக்கின்றது யுத்தம்.

இந் நிலையில் எப்பாடுபட்டாவது வேறு பல தனது கூட்டாளி நாடுகளையும் இந்த போரில் ஈரானுக்கு எதிராக இழுத்துவிடுவதற்கு…. யுத்தம் தொடுப்பதற்கு சிண்டு முடிதல்களை இஸ்ரேல் அமெரிக்கா இரண்டும் மேற்கொண்டாடும் அவை பாரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இந்த வகையில் சர்வதேச சமூகங்களை நாம் பாராட்டியாக வேண்டும்.

இறுதியாக அமெரிக்கா இஸ்ரேலினானல் கொல்லப்பட்ட உலகத் தலைவராக ஈரானின் உச்சபட்சத் தலைவர் கொமேனி அறிப்பட்டாலும் இதற்கு முன்பு சேகுவேரா தொடக்கம் அலன்டே சல்வடோர் வரை பல கொலைகளை அமெரிக்க உளவும் பிரிவும் இஸ்ரேலின் மொசாட்டும் செய்ததே வரலாறு.

அண்மைய வெனிசுலாவின் அதிபர் மதுராவின் கைதும் கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ மீதான பல கொலை முயற்சிகளும் இந்த வகையிற்குள் அடங்கும்

பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒருவரை எந்த வேறு நாடும் அல்லது தீவிரவாத அமைப்பும் கொல்லவில்லை என்பதே வரலாறு.

இதற்கு அமெரிக்காவின் இஸ்ரேலின் பாதுகாப்பு பலமானதாக திறமையானதாக இருந்ததே காரணம் என்றாக கூறினால் அது முழுவதுமாக ஏற்புடையதல்ல.

இதற்கான ஆதாரம் அமெரிக்க ஜனாதிபதிகள் தலைவர்கள் கொல்லப்படவில்லையா என்றால் கொல்லப்பட்டார்கள் அவையாவன…

ஆபிரகாம் லிங்கன் (1865): அமெரிக்காவின் 16-வது அதிபரான இவர், வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள ஃபோர்ட்ஸ் திரையரங்கில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜான் எஃப். கென்னடி (1963): அமெரிக்காவின் 35-வது அதிபரான இவர், டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் வாகன அணிவகுப்பின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (1968): புகழ்பெற்ற சிவில் உரிமைப் போராளியான இவர், டென்னசி மாநிலம் மெம்பிஸ் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் பால்கனியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராபர்ட் எஃப். கென்னடி (1968): அமெரிக்க செனட் உறுப்பினரும் அதிபர் வேட்பாளருமான இவர், கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் படுகொலை செய்யப்பட்டார்.

என்பதான் நிகழ்வுகள் எம் முன்னே உள்ளன.

இதற்கு அப்பால் கொலை முயற்சியில் இருந்த தப்பியது என்றாக டொனால்ட் ட்றம் வரை வரலாறு உண்டு

எனவே பாதுகாப்பு சிறப்பானதாக இருந்ததாக கூறும் வார்த்தை அடிபட்டுப் போகின்றது.

இதன் அடிப்படையில் பார்த்தால் இன்றைய நேற்று நேட்டோ மகாநாட்டில் துருக்கியில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு ஈரானால் உயிர் அச்சுறுத்தல் என்பதுவும் பொருத்தம் மற்றதாகிப் போகின்றது.

அதற்காக அவர் அமெரிக்காவின் வான்படையின் அதி நவீன உயர் பாதுகாப்பு விமானத்தில் இருந்து சரக்கு இறக்கும் வழியாக அதிபரை வெளியேற்றி சாப்பாட்டுக் கழிவுகளை ஏற்றும் சாதாரண லாறியில ஏற்றி இன்னொரு அதேயளவு பாதுகாப்பான விமானத்தில் ஏற்றி ஈரானின் கொலை செயற்பாட்டில் இருந்த காப்பாற்றி விட்டோம் என்றாக அமெரிக்க உளவுத் துறைப் செய்தி வெளியிட்டு இருப்பதை வெறும் ஒரு நாடகமாக பார்க்க வைக்க எம்மைத் தள்ளுகின்றது.

அமெரிக் ஜனாதிபதியை கொல்லும் அளவிற்கு உலகில் ஒரு நாடும் மிக மோசமான எதிர்வினையிற்கு உலகத்தை உள்ளாக்கும் வேலையிற்குள் இறங்காது என்பதான விடயமே இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்காவிற்கு வெளியே நடைபெற முடியாது என்பதற்கான வாதத்திற்கு வலுச் சேர்க்கின்றது.

போர் அற்ற சமாதானம் என்றாக உலகத்தை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவருவதற்கு ஈரானிக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி அழிவிற்குள் உள்ளான ஈரான் தேசத்தை கட்டியமைப்பதற்கான நஷ்ட ஈட்டை வழங்குவதே இன்றைய நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தமக்கு இருக்கு ஓரளவு மரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு வழியாக இருக்க முடியும்.

மாறாக பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றாக விமானத்தின் முன் கதவால் ஏற்றி பின் கதவால் இறங்கி இன்னொரு விமானத்தின் முன் கதவால் ஏறுவது அல்ல.

Leave a Reply