தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), நாட்டில் வீசும் அனல்காற்றைச் சமாளிக்கத் தேசிய நெருக்கடிநிலையை அறிவித்துள்ளார். கடும் வெப்பத்தால் 19 பேர் மாண்டுள்ளனர். மே மாத நடுப்பகுதி முதல் இம்மாதம் (ஆகஸ்ட்) வரை சுமார் 2,000 பேர் வெப்பம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.