அறுபத்துமூவர்‌:

  1. அதிபத்த நாயனார்‌: நுளையார்‌ (மீன்‌ பிடிப்பவர்‌). சோழநாடு, நாகபட்டினம்‌. நவரத்தினமிழைத்த பொன்மீனைத்‌ தாம்‌ வைத்துக்கொள்ளாமல்‌ சில பெருமானுக்கென அதனைக்‌ கடலில்‌ விட்டவர்‌.
  2. அப்பூதியடிகள்‌ நாயனார்‌: அந்தணர்‌. சோழநாடு, திங்களூர்‌. மகன்‌ இறந்ததையும்‌ மறைத்துத்‌ திருநாவுக்கரசு சுவாமிகட்கு அமுதளித்தவர்‌.
  3. அமர்நீதி நாயனார்‌: வணிகர்‌. சோழநாடு, பழையாறை. சிவனடியார்‌ தந்த கோவணம்‌ காணாமற்‌ போக, அதற்கு நிறையாக மனைவி மக்கள்‌ சொத்துகளுடல்‌ தம்மையும்‌ சிவனடியாருக்குத்‌ தரமுற்பட்டவர்‌.
    4… அரிவாட்டாய . நாயனார்‌: வேளாளர்‌. சோழநாடு, கணமங்கலம்‌. சிவநிவேதனத்துக்குரிய. பொருள்‌ சிந்தியதற்காகத்‌ தமது கழுத்தை அறுக்க முற்பட்டவர்‌.
  4. ஆனாய நாயனார்‌: இடையர்‌. மழநாடு,. மங்கலவூர்‌ – பசு மேய்க்கும்போது ஐந்தெழுத்தைப்‌ புல்லாங்குழலில்‌ அமைத்து வாசித்தவர்‌.
  5. இசைஞானியார்‌: ஆதி சைவர்‌. நடுநாடு, திருநாவலூர்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகளை மகனாகப்‌ பெற்று வளர்த்த பெண்மணியார்‌.
  6. இடங்கழி நாயனார்‌: அரசர்‌. கோனாடு, கொடும்பாளூர்‌. அடியாரைத்‌ தாம்‌ வழிபாடு செய்வதற்காகத்‌ தேவைப்பட்ட நெல்‌ திருடினவர்க்கு மேலும்‌ பொருளும்‌ நெல்லும்‌ தந்தவர்‌.
  7. இயற்பகை நாயனார்‌: வணிகர்‌. சோழநாடு, காவிரிப்பூம்பட்டினம்‌. சிவனடியாருக்குத்‌ தமது மனைவியையே தானமாகக்‌ கொடுத்தவர்‌.
  8. இளையான்குடி மாற நாயனார்‌: வேளாளர்‌, இளையான்குடி – விதைத்த நெல்லெடுத்து வீட்டின்‌ கூரையை விறகாகப்‌ பயன்படுத்தி அடியார்க்கமுதளித்தவர்‌
  9. உருத்திர பசுபதி நாயனார்‌: அந்தணர்‌. சோழநாடு, திருத்தலையூர்‌ அல்லும்பகலும்‌ திருச்குளத்து நீரில்‌ சுழுத்தளவின்‌ நின்று ஸ்ரீ ருத்திரமந்திரம்‌ செபித்துவழிபட்டவர்‌.
    11 எறிபத்த நாயனார்‌: சோழநாடு, கருவூர்‌ _ பூக்குடலையைச்‌ சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச்‌ சிதறச்‌ செய்த மன்னன்‌ பட்டத்து யானையை வெட்டியவர்‌.
  10. ஏயர்கோன்‌ கலிக்காம நாயனார்‌: வேளாளர்‌. சோழநாடு, திருப்பெருமங்கலம்‌. சிவபெருமானையே தூதாக விடுத்த வன்றொண்டரை: இகழ்ந்து பின்பு திருவருள்‌ விளையாட்டால்‌ அவர்தம்‌ நண்பரானவர்‌.
  11. ஏனாதி நாத நாயனார்‌; சான்றார்‌. சோழநாடு, எயினனூர்‌ – போர்புரியும்‌பகைவன்‌ நெற்றியில்‌ திருநீற்றைக்‌ கண்டதும்‌ அவனாற்‌ கொல்லப்படும்படி நடந்து கொண்டவர்‌.
  12. ஐயடிகள்‌ காடவர்கோன்‌ நாயனார்‌: குறுநில மன்னர்‌. தொண்டை நாடு, காஞ்சிபுரம்‌ _ பதவியை வெறுத்துத்‌ தலயாத்திரை செய்து சேத்திர வெண்பாவால்‌ நிலையாமை கூறியவர்‌. இப்பாடல்கள்‌ சைவத்‌ திருமுறைகளின்‌ 11 ஆம்‌ திருமுறையில்‌ ‘சேர்க்கப்பட்டுள்ளன.
  13. கணநாத நாயனார்‌: அந்தணர்‌. சோழநாடு, சீகாழி _ திருஞானசம்பந்தரை வழிபட்டுச்‌ சரியைத்‌ தொண்டர்க்குப்‌ பயிற்சி தந்தவர்‌.
    16 கணம்புல்ல நாயனார்‌: இருக்கு வேளூர்‌: _ புல்‌ விற்று நெய்‌ கொண்டு திருவிளக்கெரித்தவர்; நெய்யினால் தமது தலைமுடியையே எரித்துவர்.
  14. கண்ணப்ப தாயனார்‌: வேடர்‌. தொண்டைநாடு, உடுப்பூர்‌ – ஆறே நாளில்‌ அளவுகடந்த பக்தி செய்து காளத்தியப்பருக்குத்‌ தம்‌ கண்‌ அப்பியவர்‌.
  15. கலிக்கம்ப நாயனார்‌: வணிகர்‌. நடுநாடு, பெண்ணாகடம்‌ ._.. தமது பழைய வேலையாள்‌ சிவனடியானாக வந்தபோது தாமும்‌ அவனை வழிபட்டு, அவனை வழிபடாத தம்‌ மனைவியின்‌ வகையை வெட்டியவர்‌. :
  16. கவிய தாயனார்‌: செக்கார்‌, தெர்ண்டை நாடு, திருவொற்றியூர்‌ – திருவிளக்குக்கு எண்ணெய்‌ இன்மையால்‌, தமது இரத்தங்கொண்டு எரிக்க முயன்றவர்‌.
  17. கழறிற்றறிவார்‌ நாயனார்‌: (சேரமான்‌ பெருமாள்‌ நாயனார்‌) – அரசர்‌. மலை நாடு, கொடுங்கோளூர்‌ – நடராசர்‌ பாதச்‌ சிலம்பொலி கேட்கத்‌ தாழ்தீதமையால்‌ சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ தோழமை பெற்றவர்‌. சிவபெருமானுடைய திருமுகப்பாசுரம்‌ பெற்றவார்‌. கயிலை சென்று ஞானவுலா பாடியவர்‌.
    21 கழற்சிங்க நாயனார்‌: . குறுநில மன்னர்‌. சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காகதீ தம்‌ மனைவியின்‌ மூக்கை சிவனடியார்‌ ஒருவர்‌ ௮றுத்த தண்டனை போதாதென்று அம்மலறை எடுத்த அவள்‌ கையையும்‌ வெட்டியவர்‌.
  18. காரி நாயனார்‌: சோழநாடு, திருக்கடவூர்‌ – கோவை பாடிப்‌ பொருள்‌ பெற்று ஆலயப்‌ பணி செய்தவர்‌.
  19. காரைக்காலம்மையார்‌ (பேயார்‌) : வணிகர்‌, சோழநாடு, காரைக்கால்‌ . சிவ பெருமானை வேண்டி மாம்பழமும்‌ பேய்‌ வடிவமும்‌ பெற்றவர்‌. ஆலங்காட்டில்‌ ‘ ஆடல்‌ கண்டவர்‌. மூத்த திருப்பதிகம்‌ முதலிய பதிகங்கள்‌ பாடியவர்‌. இப்பதிகங்கள்‌ சைவத்திருமுறை 11ஆம்‌ திருமுறையில்‌ சேர்க்கப்பட்டுள்ளன.
  20. குங்குவியக்கலய தாயனார்‌: அந்தணர்‌. சோழநாடு, திருக்கடவூர்‌ – மனைவியின்‌ நாலியை விற்றுக்‌ குங்குலியம்‌ வாங்கியவர்‌. சாய்ந்த இலிங்கத்தைத்‌ தம்‌ கழுத்தின்‌ பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்‌.
  21. குலச்சிறை தாயனார்‌: பாண்டியநாடு, மணமேற்குடி – மன்னன்‌ சமணனாயிருந்த போதும்‌ தாம்‌ சிவனடியாரை வழிபட்டவர்‌. திருஞானசம்பந்தரை அழைத்து வந்து அரசனையும்‌ நாட்டையும்‌ சைவமாக்கியவர்‌.
  22. கூற்றுவ நாயனார்‌: குறுநில மன்னர்‌. களந்தை ._. தில்லை வாழ்ந்தணர்‌ தமககு முடிசூட்டமறுக்கவே, தில்லையம்பலவன்‌ [திருவடிகளையே முடியாகச்‌ சூட்டப்‌ பெற்றவர்‌.
  23. கோச்செங்கட்‌ சோழ நாயனார்‌: (அரசர்‌. சோழநாடு – முற்பிறவியில்‌ சிலந்தியாகச்‌ சிவபூசை செய்தவர்‌. எழுபது சிவாலயங்களைக்‌ கட்டியவர்‌.
  24. கோட்புலி நாயனார்‌: வேளாளர்‌. சோழநாடு, திருநாட்டியத்தான்குடி – சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைச்‌ சுந்தரமூர்த்தி சுவாமிகட்கு அர்ப்பணம்‌ செய்தவர்‌. சிவபூசைக்குரிய நெல்லையுண்ட சுற்றத்தாரனைவரையும்‌ (சீசு உட்பட) கொன்றவர்‌.
  25. சடைய நாயனார்‌: ஆதி சைவர்‌. நடுநாடு, – திருநாவலூர்‌ _. . சுந்தரமூர்த்தி சுவாமிகளைப்‌ பிள்ளையாகப்‌ பெற்று அவருக்குச்‌ சடங்கவி சிவாசாரியர்‌ மகளைத்‌ : திருமணம்‌ செய்விக்க முயன்றவர்‌.
  26. சண்டேசுவர நாயனார்‌: அந்தணர்‌. சோழநாட்டு, திருச்சேய்ஞ்ஞலூர்‌ – *யிடேகப்‌ பாற்குடத்தைத்‌ தம்‌. தந்தை காலால்‌ இடறியதைக்‌ கண்ணுற்றதும்‌ அவரது காலை வெட்டித்‌ தொண்டர்க்கு நாயகம்‌ பெற்றவர்‌.
  27. சத்தி நாயனார்‌: வேளாளர்‌. சோழநாடு, விரிஞ்சியூர்‌ _ சிவனடியார்களைக்‌ குறை கூறுபவார்களுடைய நாக்கை அறுத்தவர்‌.
  28. சாக்கிய நாயனார்‌: வேளாளர்‌. திருச்சங்கமங்கை _ மறவாது நாடோறும்‌ சிவலிங்கத்தின்‌ மீது கல்லெறிந்து வழிபட்டவர்‌.
  29. சிறப்புலி நாயனார்‌ அந்தணர்‌. சோழநாடு, திருஆக்கூர்‌ _ அடியார்கட்கு அமுதும்‌ பொருளும்‌ தந்தவர்‌.
  30. சிறுத்தொண்ட நாயனார்‌: .மாமாத்திரப்‌ பிராமணர்‌. சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி _ வாதாவிப்போரில்‌ வென்றவர்‌. சிவனடியார்க்குத்‌ தமது ஒரே மகனைக்‌ கறியாகச்‌ சமைத்து வைத்தவர்‌.
  31. சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌: ஆதி சைவர்‌. நடுநாடு, திருநாவலூர்‌ – திருத்தொண்டத்‌: தொகை பாடியவர்‌, இறைவனைத்‌ தூது கொண்டவர்‌; முதலையுண்ட பிள்ளையை வருவித்தவா்‌. இவர்‌ அருளிய பதிகங்கள்‌ ஏழாவது திருமுறை வடிவில்‌ உள்ளன.
  32. செருத்துணை நாயனார்‌: வேளாளர்‌, ‘ சோழநாடு – தஞ்சாவூர்‌ – கழற்சிங்க நாயனாருடைய மனைவி சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக அவள்‌ மூக்கை. அறுத்தவர்‌.
  33. சோமாசிமாற நாயனார்‌; அந்தணர்‌. சோழநாடு, திருஅம்பர்‌ _ வேதவேள்வி செய்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை வழிபட்ட வர்‌.
  34. தண்டியடிகள்‌ நாயனார்‌: சோழநாடு, திருவாரூர்‌ – பிறவிக்‌. குருடரஈயிருந்தும்‌ ்‌ திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச்‌ சமணரை வென்றவர்‌. தவல
  35. திருக்குறிப்புத்‌ தொண்ட நாயனார்‌; ஏகாலியர்‌. தொண்டைநாடு, காஞ்சிபுரம்‌ சிவனடியாருக்கு வாக்களித்தவாறு துஷ்யைத்‌ கோயக்துலர்த்தித்‌ தர முடியாமற்‌ போனபடியால்‌ தமது தலையைக்‌ கல்லின்‌ மீது மோதிக்‌ கொள்ள முயன்றவர்‌?
  36. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள்‌: அந்தணர்‌, சோழநாடு, .சீகாழி – உமா தேவியாரால்‌ ஞானப்பால்‌ ஊட்டப்பெற்றவர்‌. தேவாரம்‌ பாடி எலும்பைப்‌ பெண்ணாக்குதல்‌ முதலிய பல அற்புதங்கள்‌ செய்து, தமது திருமணத்துக்கு வந்தவர்கள்‌ : அனைவருக்கும்‌ முத்தி தந்தவர்‌. இவர்‌ அருளிய பதிகங்கள்‌ 1, 2 3 திருமுறைகள்‌ வடிவிலுள்ளன.
    41 திருநாவுக்கரசு சுவாமிகள்‌: வேளாளர்‌. நடுநாடு, திருவாமூர்‌ – கருங்கல்லோடு கடலில்‌ வீழ்த்தப்பட்டவர்‌. ஐந்தெழுத்தோதிக்‌ கடலில்‌ மிதந்து கரையேறிப்‌ பல தேவாரங்கள்‌ பாடிக்‌ ‘ கைத்தொண்டு செய்து முக்தியடைந்தவா்‌; இவர்‌ அருளிய பதிகங்கள்‌ 4,5,6 ஆம்‌ திருமுறைகளில்‌ உள்ளன.
  37. திருநாளைப்போவார்‌ நாயனார்‌ (நந்தனார்‌: புலையர்‌. சோழநாடு, ஆதனூர்‌ _? தில்லையைக்‌ காண விரும்பித்‌ தீப்புகுந்து முனிவராயெழுந்து. சிற்றம்பலவன்‌ திருமுன்பு திருவருளில்‌ மறைந்தவர்‌.
  38. திருநீலகண்ட நாயனார்‌: குயவர்‌. சோழநாடு, சிதம்பரம்‌.) அயலறியாவண்ணம்‌ மனைவியின்‌ சபதத்துக்குடன்பட்டு அவளைத்‌ தீண்டாது இளமையிலும்‌ முதுமையிலும்‌ இல்லறம்‌ நடத்திப்‌ பின்‌ திருவருளால்‌ இளமை பெற்றவர்‌.
  39. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்‌: பாணர்‌. நடுநாடு, திருஎருக்கத்தம்புலியூர்‌ – – திருஞானசம்பந்தருடன்‌ சென்று யாழிசைத்தொண்டு புரிந்தவர்‌.
  40. திருநீலநக்க நாயனார்‌: அந்தணர்‌. சோழநாடு. சிவபெருமான்‌ திருமேனி மீது விழுந்த சிலம்பியைப்‌ போக்கத்‌ தம்‌ வாயால்‌ ஊதிய தம்‌ துணைவியைக்‌ கடிந்தவர்‌. பின்னர்ச்‌ சிவபெருமானால்‌ ஆட்கொள்ளப்பெற்றவர்‌. திருஞானசம்பந்தருடன்‌ பல தலங்களுக்கும்‌ சென்றவர்‌. இறுதியில்‌ திருஞான சம்பந்தர்‌ திருமணத்தில்‌ கலந்துகொண்டு அந்நிலையில்‌ இறைவன்‌ திருவடி சேர்ந்தவர்‌.
  41. திருமூல நாயனார்‌: இடையார்‌. சோழநாடு, சாத்தனூர்‌ – மூலன்‌ உடலில்தாம்‌ புகுந்து மூவாயிரம்‌ ஆண்டிருந்து திருமந்திரம்‌ அருளிச்செய்தவர்‌. திருமந்திரம்‌ பத்தாம்‌ சைவத்திருமுறையாகவுள்ள து.
  42. நமிநந்தியடிகள்‌ நாயனார்‌: அந்தணர்‌. சோழநாடு, ஏமப்பேறூர்‌ _ தண்ணீரால்‌ விளக்கெரித்தவர்‌. திருவாரூர்ப்‌ பிறந்தாரையெல்லாம்‌ சிவசாரூப்பியராகக்‌ கண்டவர்‌.
  43. நரசிங்க முனையரைய நாயனார்‌: குறுநில மன்னர்‌. நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர்‌. சிவவேடம்‌ பூண்ட காமக்குறி மலர்ந்த தூர்த்தனையும்‌ வழிபட்டவர்‌. 2
    49, நின்றசீர்‌ நெடுமாற நாயனார்‌: அரசர்‌. பாண்டிநாடு, மதுரை – திருஞானசம்பந்தர்‌ தந்த திருநீற்றால்‌ சுரம்‌ நீங்கி அவர்‌ திருவாக்கால்‌ கூன்‌ நிமிரப்பெற்றுச்‌ சைவரானவர்‌.
    . 30. நேச நாயனார்‌: சாலியர்‌. காம்பீலி நகரம்‌ – சிவனடியார்கட்கு ஆடை நெய்து கொடுத்தவர்‌.
    31 புகழ்ச்சோழ நாயனார்‌: அரசர்‌. சோழநாடு, உறையூர்‌ _ பகைவனது அறுபட்ட தலையிற்‌ சிவசின்னமாகிய சடை கண்டஞ்சி உயிர்விட்டவர்‌.
  44. புகழ்த்துணை நாயனார்‌: ஆதிசைவர்‌. செருவிலிபுத்தூர்‌ _ சிவபூசைக்குகவியாகப்‌ பஞ்ச காலத்தில்‌ இறைவனால்‌ காசு அளிக்கப்பெற்றவர்‌.
  45. பூசலார்‌ நாயனார்‌: அந்தணர்‌. தொண்டைநாடு, திருநின்றவூர்‌ _ மனத்திலேயே கோயில்‌ கட்டிச்‌ சிவவழிபாடு செய்தவர்‌.
    54, பெருமழலைக்குறும்ப தாயனார்‌: பெருமிழலையூர்‌ – சுந்தரமூர்த்தி சுவாமிகளை வழிபட்டு யோகத்தால்‌ அவர்‌ கயிலை செல்லுதலறிந்து தாமும்‌ கயிலை சென்றவர்‌.
  46. .மங்கையர்க்கரசியார்‌ (மதுரை அரசியார்‌. பாண்டிநாடு _ திருஞானசம்பந்தரை வரவழைத்துத்‌ தமது கணவரையும்‌ நாட்டையும்‌ சைவ நெறிப்படுத்தியவர்‌.
  47. மானக்கஞ்சாற நாயனார்‌: வேளாளர்‌. கஞ்சாறூர்‌ – திருமணம்‌ தொடங்கும்‌ போது திருமணப்‌ பெண்ணாகிய தம்‌ மகளின்‌ தலைமயிரை அறுத்துச்‌ சிவனடியாருக்குத்‌ தந்தவர்‌.
  48. முருக நாயனார்‌: அந்தணர்‌. சோழநாடு, திருப்புகலூர்‌ _ புட்பத்தொண்டு செய்து திருஞானசம்பந்தர்‌ திருமணத்தில்‌ முத்திபெற்றவர்‌.
  49. முனையடுவார்‌ தாயனார்‌: வேளாளர்‌. சோழநாடு, திருநீடூர்‌ _ கலிக்குப்போர்‌ செய்து அக்கூலி கொண்டு சிவனடியாரை வழிபட்டவர்‌.
  50. மூர்க்க நாயனார்‌: வேனாளர்‌. தொண்டைநாடு, திருவேற்காடு – சூதாட்டத்தாற்‌ கிடைக்கும்‌ பொருள்‌ கொண்டு சிவனடியார்களை வழிபட்டவர்‌. ‘
  51. மூர்த்தி நாயனார்‌: வணிகர்‌, பாண்டிநாடு, மதுரை – சந்தனம்‌ தருகிற திருப்பணியில்‌ முட்டுபாடு நேரவே முழங்கையை அரைத்தவா; திருநீறு, உருத்திராக்கம்‌, சடைமுடி ஆகிய மூன்றையும்‌ கொண்டு அரசாண்டவர்‌.
  52. மெய்ப்பொருள்‌ தாயனார்‌: குறுநில மன்னா. நடுநாடு, திருக்கோவலூர்‌. வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தன் உயிர் விட்டவர்.
  53. வாயிலார்‌ நாயனார்‌ வேளாளர்‌. தொண்டைநாடு, மயிலாப்பூர்‌ _ மானசீகமான ஞான பூசை செய்தவர்‌.
  54. விறன்மிண்ட நாயனார்‌: வேளாளர்‌. மலைநாடு, செங்குன்றூர்‌ .. சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ திருத்தொண்டத்‌ தொகை பாடுதற்குக்‌ காரணமாயிருந்தவர்‌.மேற்கூறிய விவரங்களுள்‌ சிலருடைய மரபு, நாடு, ஊர்‌ முதலியன குறிக்கப்படாமைக்குக்‌ காரணம்‌, சேக்கிழார்‌ சுவாமிகள்‌ அவற்றைப்‌ பெரியபுராணத்துள்‌ கூறாமையேயாகும்‌. அறுபத்து மூவர்‌ பெயர்கள்‌ அகரவரிசையில்‌ கோவை செய்யப்பெற்று எண்கள்‌ தரப்பட்டுள்ளன.
    நன்றி : கோவிற் களஞ்சியம்