அதுவரை அவர் காவிரிப் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஆதரவாளர்கள் சிலர் த்ரிஷா த்ரிஷா என்று கூக்குரல் இடுகின்றார்கள். உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் எங்கும் த்ரிஷாவைப்பற்றி இக்காணொளியில் குறிப்பிடவில்லை.
இதை விட மிகவும் கீழ்த்தரமாக மாறி மாறி திமுக, அதிமுக, ஏனைய கட்சியினர் வசை மாரி பொழிந்திருக்கின்றார்கள். அவர்கள் மீது யாரும் வழக்குகள் தாக்கல் செய்யவில்லை. ஏனென்றால் தேர்தலில் இவையெல்லாம் சகஜம் என்று அப்படியே கேட்டுப் புறக்கணித்துச் சென்று விடுவார்கள்.
ஆனால் இன்றுள்ள இன்ஸ்டாகிராம் ஆதரவாளர்கள் சிந்திப்பதில்லை. ரீல்ஸ் போடுபவர்கள், தேவையில்லாமல் வழக்குப் பதிவு செய்து , தமிழகத்துக்கு எவ்வளவு நட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
உதயநிதி ஸ்டாலின் இவ்விடயத்தில் பொறுப்புள்ள எதிர்கட்சித்தலைவராகச் செயற்பட்டிருக்கின்றார். அவரது ஆதரவாளர்களின் செயல்களுக்கு அவர் எப்படி பொறுப்பெடுக்க முடியும்?
த்ரிஷா த்ரிஷா என்று ஆதரவாளர்கள் சிலர் கூக்குரல் இட்டபோதும் அவர் த்ரிஷா பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இந்நிலையில் பெண்களை அவமதித்தாக, ஆபாசத்தைக் கட்டவிழ்த்து விட்டதாகச் சமூக ஊடகங்களில் ஒரே கூப்பாடு!
உதயநிதி ஸ்டாலின் தமிழகத்து வரவேண்டிய காவிரித்தண்ணீர் வரவில்லையே என்பது பற்றிய ஆர்ப்பாட்டாத்தில் உரையாற்றுகின்ற்றார். வரவேண்டிய தண்ணீர் வரவில்லை என்பது பற்றிய உரை.
எனவே வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. அதைக்குறிப்பிட்டு ‘எங்க தண்ணி வரவில்லையோ அங்கு தண்ணி வரனும்’ என்று குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா.
உண்மையில் வந்திருக்க வேண்டிய காவிரித் தண்ணீர் இன்னும் வரவேண்டிய இடத்தில் வரவில்லை. அதைத்தான் அவர் அங்க என்று குறிப்பிடிருக்கின்றார்.
ஆனால் ரீல்ஸ் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், காவல் துறையினர் அதிகம் அங்கு பார்ப்பது பாலியல் காட்சிகளைத்தாம். இதனால் அவர்களுக்கு அவர்களுக்குப் புரிந்த தண்ணி நினைவுக்கு வந்து விட்டது.
உதயநிதி தனது உரையில் காவிரித்தண்ணீர்ப் பிரச்சனை பற்றித்தான் பேசுகின்றார். இடையில் கூட்டத்தில் சிலர் த்ரிஷா என்றதும் அடுத்து அவர் பேசிய தண்ணிச் சொற்பதம் இவர்களுக்குத் தெரிந்த தண்ணியை நினைவூட்டி விட்டது. தற்குறிகள் ஆட்சியில் அரசன் எவ்வழி! குடிகள் அவ்வழி!
ஒரு காலம் தமிழகத்தில் அண்ணா போன்றவர்களின் நீண்ட , பொருள் பொதிந்த உரைகளையெல்லாம் கேட்டு மகிழ்ந்த மக்கள் இருந்தார்கள். இன்று மிகவும் சாதாரணமான உரையுடன் பொருந்தும் வசனங்களுக்குக் கூட அர்த்தத்தை வலிந்து திணிக்கின்றார்கள்.
கலைஞர் சிலேடையாகப் பேசுவதில், உரையாடுவதில் வல்லவர். உதயநிதி ஸ்டாலின் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர். சிலேடையாக எழுதுவது தமிழ் இலக்கியத்தில் ஓர் அம்சம். அது ஒரு திறமை. உதயநிதி ஸ்டாலின் காவிரித்தண்ணீர் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார். அப்போது சிலேடையாக உதிர்த்த வார்த்தைகள் இவை.
இந்த வழக்கு நீதி மன்றத்தில் நின்று பிடிக்காது. வழக்கில் தீர்ப்புக் கூறும் நீதிபதிகள் நிச்சயம் , இதனை ஊதிப் பெருப்பித்து , வலிந்து பொருள் கண்டு , எதிர்கட்சித்தலைவரைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.
ஏனென்றால் இதன் மூலம் மிகப்பெரும்பொருள்ரீதியிலான நட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
இது போன்ற தமிழக அரசின் செயற்பாடுகள் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக சட்டசபையில் நடைபெறவிருக்கும் வரவு செலவு விவாதத்தை அனைவரும் கூர்ந்து அவதானிக்க வைக்கும்.