அதாவது காவிரி நதி பாயும் படுக்கையை ஒட்டி பிரதேசங்களாக இவை இருக்கும்
இந்த மழை குறைந்த காலத்து பயிர் செய்கை குறுவை என்றாகவும் அதன் பின்பு சம்மா பயிர் செய்கை என்றாகவும் பொதுவாக சொல்லப்படுவது வழக்கம்
தமிழ் நாட்டின் ஒகேனக்கல்(மல்லிகை பூ அதிகம் விளையும் பகுதி) பகுதியில் ஆரம்பித்து மயிலாடு துறையில் பாக்கு நீரிணையில் கலக்கும் வரை வளைந்து நெளிந்து ஓடும்.
ஒகேனக்கல் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் மாம்பழம் (Mango) தான் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மல்லிகைக்குப் பதிலாக சாமந்தி (Chrysanthemum), ரோஜா (Rose) மற்றும் சம்பங்கி (Tuberose) போன்ற மலர்கள் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.
இந்த தமிழ் நாட்டின் காவிரியிற்கு அருகாக வளைந்து நெளிந்தபடி பெரும் தெருவும் இருப்பது அழகோ அழகு. இந்த வீதியில் மெதுவாக பயணப்படுதல் மிகவும் ஆபூர்வமான மகிழ்வான இரம்மியமான உணர்வைத் தரும் சமையங்களாக இருக்கும்.
எனக்கு நிறையவே இந்த அனுபவங்கள் உண்டு. அவற்றை எழுத வார்த்தைகள் பொட்டிக் கொண்டே வரும்
காவிரி ஆறு தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்து நுழைந்து, இறுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இந்த காவிரி நீரின் சில துளிகளை நாமும் எமது யாழ்பாணத்தின் வட கடலான பாக்கு நீரிணையிலும் உணர்வோம் அல்லவா….?
எனவே எமக்கும் உணர்வாக உறவாக எம்முடன் கலந்த நீர்தான் காவரி நீர் ஆகும்.
தமிழ்நாடு கர்நாடகா என்று இரு மாநிலங்களிலும் காவிரி ஆறு பாயும் பயணத் தூரம் நீளம் 800 கி.மீ ஆகும். இதில் கர்நாடகாவில் இருந்து வந்து, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 416 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது.
கடந்து செல்லும் மாவட்டங்களாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய முக்கிய மாவட்டங்கள் வழியாக இது பயணிக்கிறது.
தமிழ்நாட்டின் முக்கிய வழித்தடமாக கர்நாடக எல்லையைக் கடந்து தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் என்ற ஊரில் நுழைந்து ஒகேனக்கல் அருவியாக முதலில் ஆரம்பிக்கின்றது
அங்கிருந்து சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரை வந்தடைந்து, அங்கு புகழ்பெற்ற ஸ்டான்லி நீர்த்தேக்கம் (மேட்டூர் அணை) வழியாகத் தேக்கப்பட்டுப் பின்பு தமிழ் நாட்டின் நீரைத் திறந்து விடுதல் என்ற பொறி முறையின் அடிப்படையில் பாய்கிறது.
காவேரியுடன் இணையும் முக்கிய துணையாறுகளாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பவானி ஆறும், கரூர் மாவட்டம் கட்டளை என்ற இடத்தில் நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகளும் இருக்கின்றன.
இந்த மாவட்டங்களில் ஆறு மிகவும் பரந்து காணப்படுவதால் இங்கு காவிரி ஆறு அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறது.
பின்பு திருச்சிக்கு அருகில் முக்கொம்பு என்ற இடத்தில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிகிறது. இதன் வடக்குக் கிளைக்கு கொள்ளிடம் என்றும், தெற்குக் கிளைக்குத் தொடர்ந்து காவிரி என்றும் பெயரும் வழக்கத்தில் இருக்கின்றது.
இவை இரண்டும் சிறீரங்கம் என்ற ஆற்றால் ஆன தீவை உருவாக்கிய பின் மீண்டும் இணைகின்றன
இதன் பின்பு கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணையை அடைந்ததும், காவிரி பல கிளைகளாகப் பிரிந்து தஞ்சாவூர் டெல்டா பகுதிகளை வளப்படுத்துகிறது.
இறுதியாக, கும்ப கோணம், மன்னார்குடி ஊடாக மயிலாடுதுறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம்) என்ற இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலந்து தன் பயணத்தை… பாய்ச்சலை…. நிறைவு செய்கிறது.
இந்த மிக நீண்ட காவிரியின் பாய்சல் அப்பகுதிகள் எங்கும் பிரதானமாக நெல் சாகுபடி செய்வதற்கும் மக்களின் அன்றாட தேவைகளுக்கான நீரை பூர்த்தி செய்வதற்கும் ஏதுவாக அமைகின்றது.
கூடவே வரட்சியான காலப்பகுதிகளில் நிலத்தடி நீரைப் பெறுவதற்கான ஆதாரமாகவும் இது விளங்குகின்றது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காவிரியைக் பெண்ணாக உருவகித்து “நடந்தாய் வாழி காவேரி” என்ற புகழ்பெற்ற பாடலை இயற்றியுள்ளார்.
இதன் அடிப்படையில் பல திரை படங்களிலும் பாடல்கள் உருவாகப்பட்டன.
அவையாவன…
‘அகத்தியர்’ திரைப்படத்தில் “நடந்தாய் வாழி காவேரி” என்றாக சிலப்பதிகாரப் பாடலை அடிப்படையாகக் கொண்டு, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மிக உன்னதமான பக்தி மற்றும் இயற்கை போற்றும் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் “காவிரி ஆரே காவிடை ஆரே” என்றாக காவிரியின் அழகையும், அதன் பாய்ச்சலையும் நாதஸ்வர இசையோடு விவரிக்கும் ஒரு உன்னதப் பாடல் இணைக்கப்பட்டுள்ளது.
கூடவே ‘சங்கமம்’ திரைப்படத்தில்”மார்கழித் திங்கள் அலைகளே” “காவிரி ஆறும் வைகையும் வந்து கலக்கின்ற இடம்” எனத் தமிழகத்து நதிகளின் பெருமையைப் பேசும் பாடல் உருவாக்கபட்டிருந்தது.
அண்மையில் வெளி வந்த பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் “பொன்னி நதி பார்க்கணுமே” என்ற பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காவிரியின் (பொன்னி நதி) வேகத்தையும், சோழ நாட்டின் அழகையும் இளமைத் துடிப்புடன் விவரிக்கும் பாடல் அமைந்திருந்தது.
இவ்வாறு தமிழ் நாட்டு மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கும் காவிரி ஆற்றின் பாய்ச்சலுக்கு பருவ மழையிற்கு அப்பால் கர்நாடகாவில் உருவாகி தமிழ் நாட்டிற்குள்ளால் பாய்வதான மேட்டில் இருந்து தாழ்வான கடை நிலையிற்கு பாய்வதற்கு கர்நாடகா மாநிலம் தொடர்ச்சியான நீர் போக்குவரத்தை அனுமததிதாக வேண்டும்.
இதனை தடுப்பதற்கான தடுப்பணையை கர்நாடகா தனது பகுதியிற்குள் கட்டி ஆற்று நீரின் பாய்ச்சலை இந்தி உச்ச நீத மன்றத்தால் உருவாக்கப்பட்ட நீர்பாயம் வழங்கிய நெறி முறைகளை மீறீச் செயற்படு நிலமையில் தற்போது இதற்கான போராட்டங்கள் எழுந்துள்ளது.
இங்கு மழையால கிடைக்கும் இயற்கையின் நீரை இருப்பதற்கு ஏற்ப பகிர்ந்து இருவருமு; பயன்படுத்தல் என்ற சமூக நீதியே மனித குலத்திற்கு ஏற்புடையதாகவும் சரியானதாகவும் நீதியிற்கு ஒத்ததாகவும் இருக்க முடியும்.
மாறாக ‘…நான் மூக்கு முட்ட குடிச்ச பின்பு மிச்சம் இருந்தால் மட்டும் கொடுப்பேன்…’ என்றான அணுகு முறை சரியானது அல்ல.
அதே போல் இருப்பதைப் பகிர்ந்து பாவித்தல் என்பதற்கு அப்பால் கர்நாடகா மாநிலத்தின் வரட்சியைக் கருத்தில் கொள்ளாது தமிழ் நாடு நீரைத் தா என்றாக அரசியல் செய்வதும் சரியல்ல.
கர்நாடகா(குறிப்பாக பெங்களுர் என்ற பெரு நகரம்) தனக்கு குடிப்பதற்கே நீர் இல்லை என்றான உணர்ச்சி வசமான அரசியலையும் தமது காவிரிப் படுக்கையில் உளள பயிர்கள் வாடி வதங்கி செத்து மடிகின்றன… கூடவே அப்பகுதியில் வாழும் மக்கள் தமது குடி நீர் பிரச்சனை என்றான நிலையில் உள்ளனர் என்றாக சோற்றையும் நீரையும் இணைத்து உரிமைக் குரல் எழுப்புவதுமாக நிலமைகள் நடைபெறுகின்றன தற்போதும்.
‘நீர் இன்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, வாழ்வாதாரமான தண்ணீரைத் தெய்வமாக (காவிரித் தாய்) மதித்துப் போற்றும் திருநாள் ஆடிப் பெருக்கு.
காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு என்பது தமிழர்களின் உன்னதமான நீர் வழிபாட்டு மரபையும், காவிரியின் வாழ்வியல் பிணைப்பையும் காட்டும் மிக முக்கிய திருவிழாவாகும். தென்மேற்கு பருவமழையினால் கர்நாடக குடகு மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீர், மேட்டூர் அணை வழியாகத் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் புது வெள்ளமாகப் பாய்ந்து வருவதை மக்கள் ‘காவிரித் தாய்’ வடிவில் கொண்டாடுகிறார்கள்.
இம்முறை ஆடிப் பெருக்கை கொண்டாட முடியாது விவசாயப் பெருங்குடி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
நதி நீர் பங்கீட்டில் மேற்படுகை அரசு (Upper Riparian State) மற்றும் கீழ்ப்படுகை அரசு (Lower Riparian State) ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகள், சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் வழமைகளின்படியே தீர்மானிக்கப்படுகின்றன.
இதன் முக்கிய வழமைகள் மற்றும் கோட்பாடுகள் பின்வருமாறு அமைகின்றன.
முக்கிய கோட்பாடுகள் (Basic Principles)சமமான மற்றும் நியாயமான பயன்பாடுகளாக….
இரு தரப்பும் நதி நீரை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கணிசமான பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மேற்படுகை அரசு செய்யும் (சிறப்பாக புதிய)திட்டங்கள் கீழ்ப்படுகை அரசைப் பாதிக்கக் கூடாது.
முன் அறிவிப்பு மற்றும் கலந்தாலோசனைகளாக ஆற்றில் அணை கட்டும் முன் இரு நாடுகளும்… மாநிலங்களும்… ஊரும்…. பேசிப் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
மேற்படுகை அரசின் உரிமைகளும் கடமைகளும் (Upper Riparian)புவியியல் சாதக நிலமைகளாக நதி தொடங்கும் இடம் என்பதால் நீரை முதலில் பயன்படுத்தும் அதிகாரம் இயற்கையாகவே கிடைக்கிறது.
தடையற்ற இறையாண்மை (Harmon Doctrine) என்பதாக தன் எல்லைக்குள் இருக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்தலாம் என்ற பழைய வாதம் இப்போது சர்வதேச அளவில் ஏற்புடையது அல்ல.
இதற்கான மறுப்புரிமை என்றாக கீழ்ப்படுகை நாட்டின் ஒப்புதல் இன்றி ஆற்றின் போக்கை முழுமையாக மாற்றவோ, நீரை முழுமையாகத் தடுக்கவோ கூடாது.
கீழ்ப்படுகை அரசின் உரிமைகளும் கடமைகளும் (Lower Riparian) வரலாற்று உரிமை (Prior Appropriation) என்பதாக காலங்காலமாகப் பயன்படுத்தி வரும் நீரின் அளவைத் தொடர்ந்து பெற இவற்றுக்கு உரிமை உண்டு.
பாதிப்புப் பாதுகாப்பாக மேற்படுகை நாட்டின் அணை கட்டுமானம் அல்லது மாசடைதலால் கீழ்ப்படுகையில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படின் இழப்பீடு கோரலாம்.
பயன்பாட்டு எல்லைகளாக இயற்கை ஓட்டத்தைச் சார்ந்து மட்டுமே புதிய திட்டங்களை வகுக்க முடியும்.
மனித குலம் இதுவரை தனது வளர்ச்சிப் போக்கில் சர்வதேச வழிகாட்டுதல்கள் (International Rules)ஹெல்சின்கி விதிகள் என்றாக 1966 ம் ஆண்டு வகுத்துள்ள விடயமாக… நதிப் படுகையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் சம உரிமை பெற வழிவகை செய்கிறது.
ஐநா சபையின் 1977 முடிவுகளின் படி சர்வதேச ஆறுகளைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மற்றும் பிற நாடுகளின் தேவைகளைக் கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இந்தியச் சூழலில் (Indian Context) மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தாவா சட்டம் 1956 ஆண்டில் உருவாக்கப்பட்டதன் பிரகாரம் காவிரி, கிருஸ்ணா போன்ற நதி நீர் சிக்கல்களைத் தீர்க்க தீர்ப்பாயங்கள் அமைக்க உதவுகிறது.
மாநிலங்களுக்கு இடையேயான நீர் தொடர்பான தகராறுகள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான மன்றங்கள் முக்கிய பிரச்சினைகளுக்கான சமமான பகிர்வு என்பதாக குறிப்பாக, நீர் ஆதாரங்கள் குறைவாக உள்ள பகுதிகளில், நீரின் பயன்பாட்டை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும்.
இந்தியாவில் மேற்படுகை மற்றும் கீழ்ப்படுகை அரசுகளுக்கு இடையேயான நதி நீர் பங்கீட்டிற்கு மிகச்சிறந்த உதாரணம் காவிரி ஆறு நீர் விவகாரம் ஆகும். இதில் கர்நாடகா மேற்படுகை அரசாகவும், தமிழ்நாடு கீழ்ப்படுகை அரசாகவும் உள்ளன.
இலங்கையிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு குளத்தின் (மிகை) நீரை யாழ்ப்பாண குடா நாட்டிற்கு வழங்குதல் என்பதிலும் நாம் இந்த அனுபவங்களை சர்வதேச வழமைகளை பயன்படுத்த முடியும்.
காவிரி நீர் வழங்குதல் என்பது வழமைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி முதல் காவிரி நீர் ஆண்டின் கணக்குத் தொடங்குவதால், ஜூன் மாதத்திற்கான தண்ணீரை கர்நாடகா ஜுன் 1 இல் இருந்து திறந்து விடத் தொடங்க வேண்டும்.
தமிழகத்தின் விவசாயத் தேவையைப் பொறுத்தவரை முக்கியக் குறிப்புகளாக…. மேட்டூர் அணை திறப்புத் தேதி ஜூன் 12 ஆகும். அது குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்(தேக்கி வைப்பட்டிருக்கும்) தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
ஜூன் 12 அன்று அணை திறக்கப்பட வேண்டும் என்றால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது 90 அடியாக இருக்க வேண்டும். அதனால் கர்நாடகா ஜூன் மாதத் தொடக்கத்தில் உரிய தண்ணீரைத் திறந்து விட்டால் மட்டுமே, ஜூன் 12-ல் தமிழக அரசு மேட்டூர் அணையைத் திறக்க முடியும்.
இதன் அடிப்படையில்தான் தமிழ் நாட்டின் அரசு தனது மக்களுக்கான நீர் தேவை பற்றிய காவிரி விடயத்தில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் ஆரம்பத்தில் இருந்து கர்நாடகா அரசு நீரைத் உரிய நேரத்தில் திறந்து விடுகின்றதா என்றான சரிபார்த்தல் எனப்தாக நிர்வாகத்தை செய்தாக வேண்டும்.
ஆனால் தற்போதைய விஜய் அவர்களின் தலைரமயிலான தவெக அரசு ஆகஸ்ட் மாதம் அளவில்தான் தனது செயற்பாடுகளை அதிகம் முடுகத் தொடங்கியதாக உணர முடிகின்றது அதாவது 60 நாட்கள் தாமதித்து.
காவிரி நீர் பிரச்சனை என்பது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு முக்கியமான நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனையாகும்.
எனவே ஒரு சில தினங்களில் இதனைத் தீர்க முடியுமா என்று சாக்கு போக்கு மட்டும் சொல்லி தமிழ் நாட்டின் அரசு தனது கடமையை பொறுப்பை செயற்படாத் தன்மையை மறைக்க முயலுகின்றது.
குறிப்பாக, காவிரி ஆறு உற்பத்தியாகும் மேல்நில மாநிலமான கர்நாடகாவிற்கும், அதன் நீரை நம்பி பலநூறு ஆண்டுகளாக விவசாயம் செய்யும் கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டிற்கும் இடையேதான் இந்த மோதல் மிகத் தீவிரமாக உள்ள நிலையில் இதில் தமிழ் நாடு அரசு மிகத் தீவிரமாக கவனமாக சரியாக செயற்பட்டாக வேண்டும்.
‘ஜனநாயகன்’ திரைபபடத்தை அமைச்சர்கள் உட்பட அதிகாரிகள் அவரின் இரசிகர்கள் பார்த்து கொண்டாட வேண்டும் என்று முதல் அமைச்சரும் அவரின் சகாக்களும் எடுத்த முன் முயற்சிகளை காவிரி நீர் பிரச்சனையில் அவர்கள் எடுத்தார்களா என்பதை உங்கள் பார்வையிற்கே விட்டு விடுகின்றேன்.
இது பல இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு அப்பால் இதனால் உற்பத்தியாகும் நெல் என்றாக பலரின் சோற்றுப் பிரச்சனையும் குடி நீர் பிரச்சனையும் இதற்குள் ஆழமாக இருக்கின்றது.
நீண்ட பிரச்சனையின் வரலாற்று பின்னணியாக 1892 மற்றும் 1924 ஒப்பந்தங்கள் என்பன அன்றைய பிரித்தானிய காலனி ஆட்சியில் சென்னை மாகாணத்திற்கும் (தமிழ்நாடு) மைசூர் சமஸ்தானத்திற்கும் (கர்நாடகா) இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதன் அடிப்படையில் 1974-ல் இந்த ஒப்பந்தங்களின் ஆயுட்காலம் முடிந்த பின்னர், கர்நாடகா புதிய அணைகளைக் கட்டியதால் சிக்கல் தொடங்கியது.
இதனைத் தீர்பதற்கு இந்திய ஒன்றிய அரசு தீர்ப்பாயம் அமைப்பு அமைத்தது. இது தமிழ்நாட்டின் தொடர் வலியுறுத்தலால் 1990-ல் காவிரி நீர் தகராறு தீர்ப்பாயம் (CWDT) அமைக்கப்பட்டது.
ஆனால் இதற்கான 17 வருடங்கள் களித்து 2007 இல் இறுதித் தீர்ப்பு அடைந்தது.
தீர்ப்பாயம் வழங்கிய தீர்பாக காவிரி நீரின் மொத்த அளவான 740 டி.எம்.சி-யில் தமிழ்நாட்டிற்கு 419 டி.எம்.சி, கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி எனப் பங்கீடு செய்தது.
மேன் முறையீட்டிற்கு கரநாடகா அரசு சென்று உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2018 ஆம் ஆண்டு வழங்கியது.
இறுதித் தீர்ப்பின்படி நீர் பங்கீட்டு அளவு மாற்றியமைக்கப்பட்டது. அது தமிழ்நாட்டின் பங்கு: 404.25 டி.எம்.சி (முந்தைய அளவை விட 10 டி.எம்.சி குறைக்கப்பட்டது) எனவும், கர்நாடகாவின் பங்கு 284.75 டி.எம்.சி (பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக 14.75 டி.எம்.சி கூட்டப்பட்டது).
கூடவே கர்நாடகா பிலிகுண்டுலு எல்லை இயல்பான மழைக் காலங்களில் கர்நாடகா ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி நீரைத் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் திறந்து விட வேண்டும் வலியுறுத்தியது.
இது மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தமிழ் நாட்டிற்குள் செலுத்தி கடலில் கலக்க வைப்பதான செயற்பாடாக பார்க்க முடியும்.
இத்தீர்ப்பை அமல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) ஆகியவை அமைக்கப்பட்டன.
பொதுவாக இவ் வருடம் உட்பட தீர்பாயத்தின் தீர்ப்புகளுக்கு மறுப்பாக கர்நாடகா அரசு செயற்படுவதினால்….?
முக்கிய மோதல் புள்ளியாக ஜூன் மாதத்தில் தொடங்கும் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட குறுவை விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது.
பருவமழை பொய்க்கும் வறட்சி ஆண்டுகளில், தண்ணீரை எவ்வாறு விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொள்வது என்பதில் இரு மாநிலங்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதில்லை.
கூடவே கர்நாடகா அரசு கட்ட திட்டமிட்டுள்ள புதிய அணையான மேகதாது அணை சிக்கல்கள் பலவற்றை ஏற்படுத்தி வருகின்றது. இதன் கட்டுமானப் பணிகள் இன்னும் ஆரம்பம் ஆகவில்லை.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா முயற்சிப்பதைக் காவிரியின் நீர்வரத்து முற்றிலும் தடைபடும் எனக் கூறி தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது.
இது சம்மந்தமாக தற்போதைய அரசம் தனது சரியான உறுதியான நிலைப் பாட்டை தமிழ் நாடு என்பதாக அனைத்து கட்சிகள் விவசாய அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்து ஒரு பொது முடிவிற்கு வந்தாக வேண்டும்.
இதற்கான கூட்டங்களை உடன் செய்தாக வேண்டும்.
இதில் தமிழ் நாடு அரசு மெத்தனம் காட்டுவதாகவும் இதனை ஆழத்தை புருpயாதவர்கள் போல் செயற்படும் அரசிலை செய்வதாக உணர முடிகின்றது.
இதனால் விவசாயிகள் மற்றும் அவர்களின் தோழமைக் கட்சிகள் இணநை;து வீதிக்கு இறங்கி போரடியும் வருகின்றனர்.
தமிழ் நாடு ஒருமித்த குரலில் நிற்பதாக காட்டியாக வேண்டும்.
கர்நாடகா அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமது ஒற்றுமையை ஒருமித்த கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அளவில் அது சரியான செயற்பாடுதான்.
நீர்வழங்கல் சம்மந்தமாக தீர்ப்பாய முடிவுகளை கர்நாடகா அரசு செயற்படாத இடத்து அது சம்மந்தமாக கர்நாடகா அரசுடன் பேசுவதை தவிர்த்து உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்பை செயற்படுத்துகின்றார்கள் இல்லை என்றாக நீதி மன்றத்தையே நாட வேண்டும். இதுவே சரியான அணுகுமுறையாகும்.
அன்றேல்…
மாமல்ல புரம் பனையூருக்கு போகும் தண்ணீர் வழங்கலை நிறுத்தி தண்ணீர் இல்லை என்றால் விக்கலை நிறுத்த முடியாது என்றாக…..
எம்ஜிஆர் முதல் அமைச்சராக ஒரு காலத்தில் இருந்த போது அன்றைய கர்நாடக முதல் அமைச்சர் வீட்டிற்கு சென்று காவரி நீர் வழங்கல் சம்மந்தமாக பேசிய போது மதிய உணவு சாப்பிடும் போது விக்கல் எடுக்க கர்நாடக முதல் அமைசர் வீட்டில் அவருக்கு தண்ணீரை வழங்க முற்படட் போது………
‘….வேண்டாம்…’ என்று மறுத்து ‘….எனது மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றார்கள் எனவே எனக்கும் வேண்டாம்….’ என்று காவரி நீரை பெற்ற தீர்ப்பாயத் தீர்ப்;புகள் ஏற்படாத காலத்து பேச்சுவார்கைளை தமிழ் நாட்டு முதல் அமைச்சருக்கும் உணர்த்தியாக வேண்டும்.