இலகு ரயில் திட்டம் (LRT) கைவிடப்படுமா?

இந்தத் திட்டம் குறித்து அரசாங்கம் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், அதன் தற்போதைய கட்டுமானச் செலவு மற்றும் அந்தச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபகரமானதாகவோ அல்லது சாத்தியமானதாகவோ அமையாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலகு ரயில் திட்டத்திற்குப் பதிலாக, பொருளாதார ரீதியில் அதிக பலன் தரக்கூடிய ‘மெட்ரோ பஸ்’ (Metro Bus) போன்ற மாற்று போக்குவரத்துத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டே இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், செலவு குறைந்த அதேவேளை வினைத்திறன் மிக்க போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply