WSJ வெளியிட்ட தகவலின்படி, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் sanctioned எனப்படும் தடைசெய்யப்பட்ட ஈரானிய எண்ணெயைக் விநியோகித்துவிட்டுத் திரும்பிய இந்தக் கப்பல்கள், இயந்திரங்கள் இயங்காத நிலையில் கடலில் மிதந்து வருகின்றன.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா ஹோர்மூஸ் நீரிணையை (Strait of Hormuz) முடக்கியதை அடுத்து, ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய டஜன் கணக்கான கப்பல்கள் இலங்கை மற்றும் மலேசியக் கடற்பரப்புகளுக்கு அருகில் தேக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் கடற்பரப்புக்கு அருகில் இயங்கும் ஈரானிய மற்றும் பிற கப்பல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவைகள் இலங்கையின் territorial waters எனப்படும் நாட்டுக்குரிய கடற்பரப்புக்கு வெளியே சர்வதேச நீரில்தான் இயங்குகின்றன என்றும் இலங்கை அதிகாரிகள் முன்னரே தெரிவித்திருந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரானியக் கப்பல்கள் உட்பட 47 கப்பல்கள் இப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் சர்வதேச கடற்பரப்பிலேயே செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஈரானின் மீது கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நோக்கில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை விதித்துள்ளதாகவும், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் WSJ தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் ஏற்றுமதி மற்றும் கப்பல் வலையமைப்பைச் சீர்குலைக்கும் அமெரிக்காவின் பரந்த முயற்சிகளின் விளைவாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சரக்குகளை இறக்கிய பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் ஆசியக் கடற்பரப்பிலேயே ஈரானியக் கப்பல்கள் பெருமளவில் முடங்கியுள்ளன.
அமெரிக்காவின் கடல்வழி blockade காரணமாகக் காலியான கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களுக்குத் திரும்புவதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக ஏற்கனவே ‘Reuters’ நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது