இல்லத்தரசிகளுக்கு கசக்கிறது: முதலாளிகளுக்கு இனிக்கிறது

இதனால், கறிக்கும் இன்ன பிற உணவுகளுக்கும் நாவுக்குச் சுவையாக பச்சை மிளகாயைச் சேர்த்துக் கொள்ள முடியாமல் இல்லத்தரசிகள் அங்கலாய்க்கின்றனர். பச்சை மிளகாய் இவ்வளவு உயர்ந்த விலையில் விற்கப்பட்ட போதிலும், வேறு வழியின்றி இல்லத்தரசிகள் அதனை விரும்பி வாங்கிச் செல்வதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழமையாக இந்தக் காலங்களில் பச்சை மிளகாய்க்கு இவ்வளவு தட்டுப்பாடும் கிராக்கியும் ஏற்படுவதில்லை என வியாபாரிகள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

சமீப வருடங்களில் மட்டக்களப்பில் பச்சை மிளகாய் விலை உச்சத்தைத் தொட்டது இதுவே முதன்முறை என்று வியாபாரிகளும் இல்லத்தரசிகளும் தெரிவிக்கின்றனர்.

பச்சை மிளகாய் விளைச்சல் குறைந்தமைக்கு, இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நிலவி வருகின்ற கடும் உஷ்ணமான காலநிலையும் வறட்சியுமே காரணம் என்று விவசாயத்துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அடுத்த மாதமளவில் பச்சை மிளகாயின் விளைச்சல் போதியளவு இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply