ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படவில்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் செயல்பட்டு வரும் நிலையில் டி 20 அணியில் அவருக்கு இடம் கொடுக்கப்படாதது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.