கடற்றொழிலில் பெரும் மோசடி..!

ஊடக சந்திப்பையொன்றை நடாத்தி உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சுருக்குவலை பயன்பாடு, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் இலை குலைகளை போட்டு மீன்பிடித்தல் போன்ற பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

மேலும் வெளி மாவட்ட மீனவர்களுக்கு அனுமதிகளை வழங்குவது உள்ளிட்ட செயற்பாடுகளால் உள்ளூர் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வடமராட்சி கிழக்கிலிருந்து காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்கள் கரையோரமாகச் சென்று வருகிறார்கள். கடலட்டை பிடிப்பதற்கு காலை 6.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கரையோரங்களை ஒட்டி இத்தொழில் முன்னெடுக்கப்படுவதால் கரவலை மற்றும் சிறு தொழில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, இவ்வாறான சட்டவிரோத கட்டுப்பாடற்ற மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாகக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Leave a Reply