கிராம சேவகர் ஐஸூடன் கைது

மீரிகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலின் பேரில் திங்கட்கிழமை(24) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கிராம சேவையாளரிடமிருந்து ஐஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட கிராம சேவையாளர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர், செவ்வாய்க்கிழமை (25) ஆம் திகதி அன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.