கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகாமையில் வியாழக்கிழமை (07) அன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிகளவான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமாக தோட்டாக்கள் அதிகளவு சிதறி காணப்பட்டதுடன் அதனை அவதானித்த பாடசாலை சமூகம்உடனடியாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.