சிறுமி வன்புணர்வு, முக்கிய ஆதாரம் கிடைத்தது

எவ்வாறாயினும், பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்ட முடிவுகள், சந்தேகநபரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தலைமுடி அல்லவென்றும், அது மற்றொரு பெண்ணின் தலைமுடி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அந்த மிதியடியில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அரசு பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார். 

சந்தேகநபர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதன் பின்னர், படுக்கையின் காலடியில் இருந்த மிதியடியால் விந்தைத் துடைத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார். 

B22424/2026 என்ற இலக்கத்தைக் கொண்ட இவ்வழக்கில் அரசு பகுப்பாய்வாளரின் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இ யு அறிக்கையின் பிரதி ஒன்று சட்ட மா அதிபருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமி நிட்டம்புவ பொலிஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், படுக்கையின் காலடியில் இருந்த மிதியடியால் கசிந்த விந்தைத் துடைத்ததாகக் குறிப்பிட்டதை அடுத்து, விசாரணைகளின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த மிதியடி அரசு பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 
மேலும், சிறுமி தேரரின் அறை, அவரது படுக்கை மற்றும் மிதியடி உள்ளிட்ட அதன் உட்பொருட்களையும் அடையாளம் கண்டிருந்தார். 

கம்பஹா பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி காவற்துறை பரிசோதகர் (ஐP) வினிசியா பிரேமரத்ன, காவற்துறை பரிசோதகர் வசுந்தரா குணரத்ன மற்றும் அனுராதபுர பொலிஸாரின் உதவி உள்ளிட்ட காவற்துறை அதிகாரிகள் குழுவினரால் சம்பவ இடத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்க்காக, நீதவான் பசிந்து விக்ரமரத்ன இந்த வழக்கை 2027 ஜனவரி 08 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply