சிவகுமாரன் நினைவு தின நிகழ்வு

உரும்பிராய் மக்களால் கனடா ரொறன்ரோவில் ஜுன் 5, 2016 அன்று சிவகுமாரனுக்கு நினைவு தின நிகழ்வு ஒன்ற நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்து போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. உரும்பிராய் மக்களுடன் பல்வேறு சமூகவியல் செயற்பாடாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். சிவகுமாரனுடன் சம காலத்தில் வாழ்ந்த நண்பர்கள் பலரும் சிவகுமாரனுடன் பழகிய காலத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பேசிய பலரும் துரோகிகளை அழித்தல் என்ற செயற்பாட்டில் சிவகுமாரனின் பங்களிப்பு செயற்பாடுகள் பற்றியும், முதல் சயனைட் தற்கொலையாளி என்றும் விடுதலைப் போராட்டத்தின் ஆயுத நடவடிக்கைகளின் முன்னோடி என்றும் அவருக்கு புகழாரம் சூட்டினர்.

மேலும் சிவகுமாரன் ஈடுபட்ட சமபந்திப் போசன விடயங்கள் பற்றியும் கருத்துரை தெரிவித்தனர். கோப்பாய் பிரதேச மக்கள் சிவகுமாரன் யார் என்று தெரியாததினாலேயே அவரை துரத்திச் சென்றதாகவும் இதனால் தொடர்ந்து ஓட முடியாத சூழலில் நிலத்தில் வீழ்ந்த போது கைதாகும் நிலமை ஏற்பட்ட போது சயனட் உட்கொண்டு தற்கொலை செய்தாகவும் கருத்து தெரிவித்தனர். சிவகுமாரன் உருபிராயில் அக்காலத்தில் அமைந்திருந்து விளையாட்டுக் கழகம் ஊடாக தனது நண்பரகளுடன் இணைந்து செயற்பட்டதை அவரது நண்பர்கள் பதிவு செய்தனர்.

தமிழர் சமூக ஜனநாயக் கட்சி(SDPT)யின் ஜேம்ஸ் தனது உரையில் எதிரியிடம் பிடிபடும் சாத்தியங்கள் எற்பட்டால் கொள்கைப் பிடிப்புடன் மனஉறுதியாக செயற்படவேண்டும். நாம் வாழ்வதற்காகவே போராடுகின்றொம் மரணிப்பதற்காக அல்ல ஆனால் இந்த போராட்ட வாழ்வில் மரணம் சம்பவிக்கலாம். ஆனால் வலிந்த சயனைட் தற்கொலை மரணங்களில் தமக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்து தெரிவித்தார். இந்த உருபிராய் மண் சிவகுமாரனனுக்கு அப்பால் ஞானா அக்கா, செண்பகன் என்ற அகிலன் செழியன் என்ற சிவகுமார், கிபி என்ற பசுபதி சீவரத்தினம், நக்கீரன் என்ற ஜெகநாதன், சாந்தி போன்றவர்களையும் பறிந்ததும் இந்த மண்ணில்தான் என்ற கருத்து தெரிவித்தார். 1980 களில் கூலி விவசாயிகளின் போராட்டம் மையம் கொண்ட பிரதேசம் இதுவென்றும் இந்துப் போராட்டத்தில் அமரர் பத்தமநாபா போன்றோர் முன்னிலை வகித்து செயற்பட்ட சிவந்த மண் என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மாணவர் பேரவையில் செயற்பட்ட சத்தியசீலனும் அவருடன் சம காலத்தில் செயற்பட்ட வரதராஜப்பெருமாள், பத்மநாபா. புஸ்பராஜா போனறவர்களுடன் சிவகுமார் இணைந்து செயற்பட்டார் என்பதையும் நினைவு கூர்ந்தார். தனது போராட்டகாலத்தில் அதிகம் பாதுகாப்பு காரணங்களுக்காக மறைந்திருந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவிகரமாக இருந்தது உரும்பிராயும் இதனைச்சார்ந்த பிரதேசமும் என்பதையும் பதிவு செய்தார். அடிப்படையில் சிவகுமாரன் காலகட்டத்திலிருந்து இப்பிரதேசம் போராட்டத்திற்கு உறுதுணையாக இந்த மக்கள் கொண்டிருந்ததற்கு சிவகுமாரனின் மரணமும் இதனால் எற்பட்ட எழுச்சிகளும் காரணமாக அமைந்தன.

தொடர்ந்து பேசிய ஜேம்ஸ், ஆயிரம் மேடைப் பேச்சுக்களும்;, கவிதைகளும் கட்டுரைகளும் செய்ய முடியாத எழுச்சியை சிவகுமாரனின் மரணம் எற்படுத்தியிருக்கின்றது. சிவகுமாரனின் மரணச்சடங்கில் அன்றைய காலகட்டத்தில் பாடசாலை மாணவ மாணவியர் பெண்களை சுடலை வரை அழைத்து வந்து அஞ்சலி செலுத்த வைத்த எழுச்சியாக சிவகுமாரனின் மரணம் அமைந்திருகின்றது.இந்த வகையில் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் சிவகுமாரன் ஒரு பங்களிப்பை செய்துவிட்டுத்தான் மறைந்திருகின்றார் என்றும் கருத்து தெரிவித்தார்.

மக்களை அரசியல் மயப்படுத்தி அணிதிரட்டியப pன்பு ஆயதஙங்களைத் தூக்கியிருக்கும் செயற்பாட்டை சிவகுமாரன் கடைப்பிடித்திருந்தால் அவர் இன்றும் மக்களாலேயே பாதுகாக்கப்பட்டு எம்முடன் இன்று வாழந்தும் இருப்பார். இவரின் மரணம் எமக்கு ஒரு பாடத்தை விட்டுச் சென்றிருக்கின்றது அரசியல் மயப்படுதப்பட்டு மக்களி அணிதிரட்பபடாத ஆயுதப் நடவடிக்கை போராட்டங்கள் மரணங்கள் அழிவுகளுக்கு சென்று தோல்வியல் முடியும் என்பதே ஆகும் என்றார்
இறுதியாக சிற்றுண்டி பரமாற்றத்துடன் நன்றியுரையுடன் நினை கூரும் நிகழ்வு முடிவுற்றது.