சீனத் தூதுவருக்கும் ​டில்வின் சில்வாவுக்கும் இடையே சந்திப்பு

நாட்டிற்கு வந்ததிலிருந்து இலங்கை மக்களிடமிருந்து கிடைத்த அரவணைப்பான வரவேற்பைப் பாராட்டிய சீனத் தூதுவர், இலங்கையில் தனக்கு எந்தவித அந்நியமான உணர்வும் ஏற்படவில்லை என்றும், தனது பதவிவிக் காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுவாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஊழல் ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் கிராமிய வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. வறுமையை ஒழிப்பதில் சீனா பெற்றுள்ள அனுபவங்களை இலங்கைக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

சீனா ஏனைய நாடுகளுடன் உறவு கொள்ளும்போது, அந்த நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளித்தும், பரஸ்பர வளர்ச்சியை எதிர்பார்த்தும் செயல்படுகிறது என்பதைத் தூதுவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், எதிர்காலத்தில் இலங்கைக்குக் கூடுதலான முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சீன முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply