இதன் ஒரு கட்டமாக, இலங்கையில் உள்ள வத்திக்கானின் தூதரகப் பிரதிநிதியான அப்போஸ்தலிக்க நியூஸியிடம் (Apostolic Nuncio) சுரேஷ் சலேவின் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (23) காலை முறையான கடிதம் ஒன்றைக் கையளித்தனர். தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, போப் ஆண்டவரின் உதவி மற்றும் தார்மீகத் தலையீட்டை அவர்கள் கோரியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதாகவும், அதன் பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் கடந்துள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் அரசின் காவலில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.