’ஜனநாயகன்’ படத்திற்கு சிக்கல்

இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக எதிர்வரும் 9ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

எதிர்வரும் 9ஆம் திகதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் முதல்நாள் காட்சிக்கான முன்பதிவு தொடங்காமல் இருக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.