120 நிமிட ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்த நிலையில், பெனால்டி த்ரில்லரில் 4-3 என பராகுவே வெற்றி பெற்று இறுதி 16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறியது. உலகக் கிண்ண வரலாற்றின் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்விகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியால் விடுமுறை பெற்ற இரண்டாவது நாடு! நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் பலம் வாய்ந்த ஜேர்மனி அணியை வீழ்த்தி, அதற்காகத் தங்கள் நாட்டில் தேசிய விடுமுறையைப் பெற்றுக்கொண்ட இரண்டாவது தென்னமெரிக்க நாடு பராகுவே ஆகும்.
கடந்த வாரம் நடைபெற்ற குழு ஈ போட்டியில் ஜேர்மனியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றதற்காக, ஈக்குவடோர் ஜனாதிபதி டேனியல் நோபோவாவும் தங்கள் நாட்டில் தேசிய விடுமுறையை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.