டிரம்ப் ஒரு கோழை: தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் – கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ

“கொகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்க விரும்பும் நோயாளி மனிதனால் இயக்கப்படும், மிகவும் மோசமான நாடுதான் கொலம்பியா” என்று டிரம்ப் கூறியிருந்தார். மட்டுமல்லாது, “கொலம்பிய அதிபருக்கு சொந்தமாக கொகைன் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன, அதெல்லாம் வெகுநாட்களுக்கு நீடிக்காது. கொலம்பியா மீதும் ராணுவத் தலையீடு சாத்தியமா என கேட்கிறார்கள். அப்படி தலையிட்டால் நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் பலரைக் கொல்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.