தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. யுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவேன்

திருமலை துறைமுகத்தை அண்மித்து பொருளாதார வலயம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கப்பல்களால் நிரப்புபோம்

மத்தல விமான நிலையத்துக்கு  50 விமானங்கள் வரும்

இந்தியாவுடன்  பொருளாதார உடன்படிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என அனைவரிடமும் இணைந்து நாட்டை முன்னேற்றவே நான் முயற்சிக்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சர்வதேசம் எம்மை பார்க்கவில்லை. கொலைகார நாடாகவே பார்த்தது. இன்று எமது வெளிவிவகார அமைச்சர் உலகம் முழுவதும் சென்று சர்வதேச நாடுகளை எமது பக்கம் திருப்பியுள்ளார். இப்பொழுது உலகம் எம்மை ஏற்றுக் கொள்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பதுளை பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.