தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கு பிடியாணை

2008 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ​​சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர் தேசிய நில விநியோக திட்டத்தில் பங்கேற்பதால்   நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரீசிலித்த நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.