இந்தத் தடை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்க அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காலக்கெடு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் மறு அறிவிப்பு வரும்வரை இந்த தடை அமுலில் இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக, உருளைக்கிழங்கு, அதைத் தொடர்ந்து தக்காளி, பேரீச்சம்பழம் மற்றும் முட்டை போன்ற குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.
பெப்ரவரி 17 அன்று நடைபெற்ற அமெரிக்கா, ஈரான் இடையிலான இரண்டாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தனது ராணுவ இருப்பை அதிகரித்தது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களில் 150 க்கும் மேற்பட்ட விமானங்களை நிறுத்தியது.
இதனைத்தொடர்ந்து, பெப்ரவரி 26 அன்று மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், இஸ்ரேல் ஈரான்மீது தாக்குதலை தொடங்கியது.
பின்னர் இஸ்ரேல், அமெரிக்கா இரண்டும் கூட்டுத் தாக்குதலை தொடர்ந்தன. இதில் ஈரான் அதியுயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள்மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஏற்றுமதி தடையை ஈரான் விதித்துள்ளது.