சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ. எல் ஜலால்தீன், மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் ஆகியோரின் நேரடிப் பிரசன்னத்துடன் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொழுநோய் பிரிவின் ஒருங்கிணைப்பில், Alliance Development Trust நிறுவனத்தினால் இந்த நாடகம் தயாரித்து வழங்கப்பட்டது. “தொழுநோய் என்பது 100% குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும்.” சமூகத்தில் நிலவும் தேவையற்ற அச்சம் மற்றும் தயக்கங்களை களைந்து, இந்த நோய் குறித்த அறிகுறிகள் தென்படின் உடனடியாகவும் தயக்கமின்றியும் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நாடகம் அமைந்திருந்தது.