தோழர் சுமித் சக்கரவர்த்தி

அவரது அலுவலகத்தில், உணவகங்களில் தோழர்கள் நாபா கேதீஸ் இளங்கோ ஆகியோருடன் சந்திப்புகள்…நீண்ட சம்பாசனைகள்… ஆலோசனைகள்… யாவும் மறக்க முடியாத நினைவுகள்..

தோழர் நாபா வின் மறைவிற்கு சுமித் எழுதிய குறிப்பு….ஆங்கிலத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

நாபா இறுதியாக டெல்லியிலிருந்து செல்வதற்கு முன்னர் June 1990 – கேதீஸ் நாபா ஆகியோருடன் அவரை சந்தித்து நீண்டநேரம் பல விடயங்கள் பற்றியும் உரையாடியது ஞாபகம் வருகின்றது.

சுமித் இன் தந்தையார் நிக்கில் சக்கரவர்த்தி ஒரு புகழ் பூத்த பத்திரிகையாளர், இந்திராகாந்திக்கு ஒரு காலத்தில் நெருக்கமானவர் 1970களில் பங்களா தேசவிடுதலை கால கட்டங்களில் டெல்லியில் செல்வாக்கு மிக்க lobby யின் முக்கிய செயற்பாட் டாளராக இருந்தவர்.

அவரை நாங்கள் சந்தித்த வேளைகளில் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்.

1980 களின் இறுதிப்பகுதியில் -நிக்கில் உட்பட டெல்லி முற்போக்கு Lobby யினரும் ராஜிவிற்கெதிரான VP சிங் கூட்டணிக்கு ஆதரவாக செயற்பட்டதும் அதன் விளைவாக ஆட்சி மற்றம் ஏட்படுத்தியதும் தெரிந்ததே.

தந்தையின் நிலைப்பாடு அப்படியிருந்தும் – சுமித் எமது கோரிக்கைக்கு ஆதரவாக பலமாக கருத்து தெரிவிப்பவராக இருந்தார். எமது இறுதி அஞ்சலிகள் .. சென்று வா தோழனே…