நீட் தேர்வு

இந்த குளறுபடிகள் சுட்டி காட்டிய பின் எதோ செய்ய வேண்டும் என நீட் தேர்வை NTA நடத்தியது. ஆனால் அதுவும் CBSE பாடத்திட்டத்தில் தான் தேர்வுகளை தயார் செய்தது.
இரண்டாவது குளறுபடி.
மாநில திட்டத்தில் படிக்கும் 80 சதவித மாணவர்களுக்கு இரண்டாவது அநீதி.
அதேப்போல அதிக கட்டணம் வாங்கிய நாமக்கல் கல்வி நிலையங்களை நீட் கோச்சிங் வகுப்புகள் Replace செய்தன.

இரண்டு வருடங்களுக்கு குறைந்தது மூன்று லட்சம். தங்குமிடம் செலவுகள் தனி. முன்பாவது நாமக்கல் தனியார் பள்ளிகள் அகடெமிக்கு தான் பணம் வாங்கின. நீட் வந்ததும். நீட்டிற்கும் சேர்த்து பணம் வாங்கி கல்லா கட்டின.
ஆக கல்வி கட்டண சுமை கூடியதே தவிர குறையவில்லை.
மூன்றாவது குளறுபடி.

மாணவர்களுக்கு மூன்றாவது அநீதி.
லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவ கனவில் நீட் எழுத ஐயாயிரம் மாணவர்கள் மட்டுமே அரசு கல்லூரியில் நுழைவார்கள் .
மீதமுள்ளவர்கள் இதில் முழு கவனம் செலுத்தியதால் அகடெமியில் மதிப்பெண் குறைந்து என்ஜினியரிங்கோ ஆர்ட்ஸோ நல்ல கல்லூரி கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது நீட் மூலம் மாணவர்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய மனஉளைச்சல்.

கடைசியாக தனியார் கல்லூரிகளின் கட்டண கொள்ளை தடுக்கப்படும் என்றனர். நீட் வந்த பின் அந்த கட்டணங்கள் சட்டமாக்கப்பட்டன.
முன்பு 50 லட்சம் டொனேசன் வாங்குவார்கள். கல்வி கட்டணம் சேர்த்து 80 லட்சம் வரை வரும் .

தற்போது அங்கிகரிக்கப்பட்ட கட்டணமே ஆண்டுக்கு 20 முதல் 25 லட்சம். முடிக்க கோடிகளை தாண்டும்.
நீட் நன்மை எனக்கூறப்பட்ட புருடா இது.
இந்த நீட் முறை என்பது மாணவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை தரும் விசயம். மாணவ செல்வங்கள் வருடம் தோறும் உயிர் இழப்பது வருந்ததக்க விசயம்.
என்ன செய்யலாம்.

இந்தியா முழுமைக்கும்
Maths , physics, Biology, & Chemistry இவை பொதுவான பாடத்திட்டமாக மாற்றப்பட வேண்டும்.
இவற்றிற்கு தேர்வு முறை ஒன்று போல இருக்க வேண்டும்.
தற்போது விடைத்தாள்களை ஏஐ தொழில் நுட்பங்கள் திருத்துகின்றன.
இதன் மூலம் சரியான மதிப்பெண் வழங்கிவிட முடியும்.
analytical ஒரு பாடத்திட்டமாக 11,12 ல் அனைத்து பிரிவிற்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அதன் மதிப்பெண்ணும் கணக்கிட பட வேண்டும்.

இதன் கட்ஆப் அடிப்படையில்
மருத்துவம் மற்றும் ஐஐடி இடங்களை நிரப்பலாம்.
நீட் போலவே JEE தேர்வும் இதே மனஉளைச்சலை மாணவர்களுக்கு தருகிறது.

வட மாநிலங்களில் பல மாணவர்கள் இதனால் stress அதிகமாகி தவறான முடிவு எடுத்துவிடுகின்றனர்.

காரணம் மாணவ செல்வங்கள் 17 வயதில் இரட்டை குதிரையில் சவாரி செய்வது போல பொதுத்தேர்விற்கும் தயாராக வேண்டும். நீட் , JEE தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும். மிக கடினம்.

இதில் ஒரு குதிரையை துரத்திவிட்டு பொதுத்தேர்வில் மட்டும் கவனம் செலுத்துமாறு செய்வதே மாணவர்களுக்கு நன்மை பயக்கும் விசயமாகும்.
மத்திய மாநில அரசுகள் ஈகோ பார்க்காமல் இந்த விசயத்தில் செயல்பட வேண்டும்.

Ban NEET & JEE . Save Students’ Lives!

Leave a Reply