அத்துடன், கினிகத்தேனை, மொரஹேனகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேரும், அம்பகமுவை பகுதியில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 2 பேருமாக மொத்தம் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 433 குடும்பங்களைச் சேர்ந்த 1,725 பேர் தற்போது பாதுகாப்பான நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.