பதவி விலக மறுக்கும் பிரித்தானியப் பிரதமர் ஸ்டாமர்

ஐக்கிய அமெரிக்க தூதுவராக பீற்றர் மன்டெல்சனை பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நியமித்தமையானது அவரது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிய நிலையில், அவரது தொழிலாளர் கட்சியின் ஸ்கொட்லாந்துத் தலைவர் அனஸ் சர்வர் போராடப் போவதாக தெரிவித்த நிலையிலும் பதவி விலகும் கோரிக்கைகளை கணக்கிலெடுக்க அவர் திங்கட்கிழமை (09) மறுத்துள்ளார்.