புலிகளுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா? அது சொந்தப் பணமா? அல்லது றோ கொடுத்த பணமா?

விடுதலைப் புலிகளுக்காக எம்.ஜி.ஆரிடம் நிதி உதவி கோரியபோது, 10 லட்சம் ரூபாய் தருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 2 கோடி ரூபாய் தருவதாக கூறியவர் எம்.ஜி.ஆர் என பிரபாகரன் தெரிவித்தாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து வைக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுதந்திரத் தமிழ் ஈழம் அமைவதற்கு ஆயுதக் களம் ஏற்படுத்திக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மரண வாயிலில் தான் இருந்தபோதும் ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் பாதுகாக்கத் துடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் குறித்த பல்வேறு செய்திகளை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தம்மிடம் கூறியதாக வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்காக எம்.ஜி.ஆரிடம் நிதி உதவி கோரியபோது, 10 லட்சம் ரூபாய் தருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 2 கோடி ரூபாய் தருவதாக கூறியவர் எம்.ஜி.ஆர் என பிரபாகரன் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ஈழத்தமிழர் புனர்வாழ்வுக்காக 4 கோடி ரூபாய் எம்.ஜி.ஆர் கொடுத்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.

போரில் காயப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு மதுரையில் தனியாக ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தி மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆயுதப் பற்றாக்குறையால் விடுதலைப் புலிகள் தவித்தபோது அவர்களுக்கு பேருதவியும் செய்தவர் எம்.ஜி.ஆர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாம் றோவின் செயல்.