பெலோனியாவின் சோட்டாகோலா (Chottakhola) பகுதியில், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு (Polit Bureau) உறுப்பினரும் திரிபுரா எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி, மாநில செயற்குழு உறுப்பினர் சுதன் தாஸ், சட்டமன்ற உறுப்பினர் தீபங்கர் சென் மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டச் செயலாளர் தபஸ் தத்தா ஆகியோரின் தலைமையில், செங்கொடி ஏந்திய நூற்றுக்கணக்கான தோழர்கள் தோழர் பாதல் ஷிலின் தியாகிகள் நினைவிடத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
அப்போது, பாஜக குண்டர்களும் போலீசாரும் இணைந்து அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.சிபிஐ(எம்) பெலோனியா துணைக்கோட்டக் குழு உறுப்பினரான தோழர் ஷில், ஜில்லா பரிஷத் (மாவட்டப் பஞ்சாயத்து) தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே படுகொலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரணியைப் பல்வேறு இடங்களில் தடுப்பதற்கு குண்டர் படையும் போலீசாரும் கூட்டாகச் சேர்ந்து மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, தோழர்கள் நினைவிடத்தை அடைந்து தோழர் ஷிலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
பாசிச பாஜக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்த தோழர் ஜிதேன் சவுத்ரி, பாஜக ஆட்சியை வீழ்த்தி, திரிபுராவில் நிலவும் குண்டர் ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், என்ன தடைகள் வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் தியாகி பாதல் ஷிலுக்கு சிபிஐ(எம்) அஞ்சலி செலுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.