தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், அங்குப் பந்தயக் களத்திற்குச் சென்று நடிகர் அஜித் குமாரை ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் உற்சாகமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதுடன், அஜித்தின் பந்தயக் கார் மீது அமர்ந்து விஜய் போட்டோ எடுத்துக்கொண்ட காட்சிகளும் இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளன. மேலும், பந்தயத் தளத்திற்கு வருகை தந்த நடிகை த்ரிஷாவும் முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து கார் பந்தயத்தை நேரில் கண்டு ரசித்துள்ளார்.
முன்னதாக, நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், தற்போது அஜித்தின் அழைப்பின் பேரில் பந்தயத் தளத்திற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களைச் சேர்ந்த பிரபலங்கள் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்ட இச்சம்பவம் இணையத்தில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.