முதலாவது நாடாக 2026-ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு

கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் (UTC+14) உள்ளதால், உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது.

இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது.