யாழ். சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.