குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை, இன்னமும் அங்கு நிறுவப்படாமல் இருப்பது குறித்து அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், எம்மால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த விடயத்தில் நீங்களும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் அக்கறையெடுத்து, குறித்த சிலையை விமான நிலைய வளாகத்தில் நிறுவுவதற்குத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். அதனை நினைவூட்டும் வகையில், இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.”