வங்கதேச வாக்குச்சாவடியில் மோதல்: பிஎன்பி நிர்வாகி உயிரிழப்பு

பிஎன்பி கட்சியின் குல்னா மெட்ரோபாலிட்டன் பகுதியின் முன்னாள் செயலாளர் மொஹிபுஸாமன் கொச்சி தாக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை (12)   காலை இரு குழுக்களிடையே விவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது, மொஹிபுஸாமன் கொச்சிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.