வருமான இலக்கை எட்டியது இலங்கை சுங்கத் திணைக்களம்

ஒக்டோபர் 13ஆம் திகதி வரையில், சுங்கத் திணைக்களம் மொத்தமாக 2,208 பில்லியன் ரூபா வருமானத்தைச் சேகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வருமான இலக்கை எட்டிய வேகம் அதிகரித்துள்ளது.

2025ஆம் ஆண்டில், 2,115 பில்லியன் ரூபா வருமான இலக்கை நவம்பர் 11ஆம் திகதியே சுங்கத் திணைக்களம் எட்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆண்டுக்கான வருமான இலக்கு 2,231 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு நிறைவடையும் போது, சுங்கத் திணைக்களத்தின் மொத்த வருமானச் சேகரிப்பு 2,557.5 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்தது.

இதேவேளை, சுங்க நடவடிக்கைகளின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கில், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சுங்கப் பிரகடனங்களுக்கான டிஜிட்டல் கையொப்ப முறையையும் இலங்கை சுங்கத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Leave a Reply