வினயமான வேண்டுகோளை ஏற்றார் விக்னேஸ்வரன்!

வட மாகாணசபை பேரவைத்தலைவர் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 18-01-2016 திகதி நடத்திய ஒன்றுகூடலின் பின் முதல்வரிடம் கலந்துரையாட வேண்டிய மூன்று விடயங்கள் சம்மந்தமாக 20-01-2116 திகதி நேரம் ஒதுக்கி தரும்படி அவர்களால் வினயமாக விடப்பட்ட கோரிக்கையை முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி 20-01-2016 திகதி மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.

முன்நாள் நீதியரசர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டது முதல் அவருக்கு உறுதுணையாய் செயல்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் முதல்வரின் அண்மைக்கால நடவடிக்கைகளால் அடைந்த மனஅதிர்வை உணர்ந்து கொண்ட முதல்வர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களை சந்தித்து கலந்துரையாட சம்மதித்துள்ளமை அண்மையில் வெளிவரும் விரும்பத்தகாத வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
முதல்வர் தனது கடிதத்தில் 24 பேர் கையொப்பமிட்டு எனக்கு அனுப்பிய 18-01-2016 திகதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். 20-01-2016 திகதி கூட்டத்திற்கு நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அன்று மாலை 5 மணிக்கு மேற்படி தொடர்கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்துள்ளேன். எமது காரியாலய கேட்போர் கூடத்தில் கூட்டம் இடம்பெறும் என அறிவித்துள்ளார். முதல்வருக்கு அனுப்பிய வினயமான கடிதத்தில் சிவாஜி, அனந்தி, சர்வேஸ்வரன் கையொப்பமிடவில்லை. இருந்த போதும் முதல்வருடன் இடம்பெறும் கலந்துரையாடலில் அவர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது