இதன் காரணமாக இன்று (02) வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 1-ன் கீழ் இயங்கும் இப்பாடசாலைப் பகுதியில், நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக பாடசாலையின் அதிபர் கிருஷ்ணராஜா தெரிவித்தார். பாடசாலை வளாகம், வகுப்பறைகள் மற்றும் கணினி அறை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து சேறும் சகதியுமாக காணப்படுவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாடசாலையைத் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது பாடசாலை வளாகத்தைச் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகச் சுத்திகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் பாடசாலை மீண்டும் வழமை போல் இயங்கும் என்றும், நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடியே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதிபர் குறிப்பிட்டார். மேலும், மலையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலையின்போது பாடசாலை வளாகத்திற்குள் மழைநீருடன் சேர்ந்து சகதியும் மண்ணும் அடித்து வரப்படுவது தொடர்கதையாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அதிபர், இதற்கு நிரந்தரத் தீர்வாகப் பாடசாலை வளாகத்தில் முறையான வடிகால் அமைப்பை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.