ரியாத் நோக்கிய அனைத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகளும் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிலைமை மற்றும் விமான செயல்பாடுகள் தொடர்பான மதிப்பீடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் தமது பயணத் திட்டங்கள் தொடர்பில் விமான நிறுவனத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.