1985 திம்புகோட்பாடு 2017 இல் இன்றைய தமிழ்த் தலைமைியனால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. – சந்திரகுமார்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய இயக்கங்கள் 1985 ஆம் ஆண்டு திம்புவில் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தன்னாட்சி உரிமை அடிப்படையிலான கோட்பாடுகளை கொண்ட திம்பு கோட்டுபாடு 2017 இல் தமிழ் மக்களின் இன்றையத் தலைமையினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.கேடய சின்னத்தில் போட்டியிடும் தனது சுயேட்சைக் குழுவின் பிரதேச தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் மக்கள தோற்றுப் போகின்றார்கள். வாக்குக்களை பெற்று வெற்றிப்பெற்றவர்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது மக்களிடமிருந்து அந்நியப்பட்டே இருந்து வந்துள்ளனர். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கண்டுவந்துள்ளோம்்

மக்களுக்காக மக்களின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்யவேண்டும்.

அரசியல் தீர்வு விடயத்திலும் தமிழ் மக்கள தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயக பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வே. இதனையே தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் முக்கிய விடயமாக முன்வைத்து மக்களின் ஆணையை பெற்றவா்கள் இது எதுவும் இல்லாத இதற்கு மாறான விடயங்களை கொண்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு தமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் பொருட்டு தமிழ் மக்கள் வழங்கிய ஆணை மீறப்பட்டுள்ளது. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய இயக்கங்கள் 1985 ஆம் ஆண்டு திம்புவில் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தன்னாட்சி உரிமை அடிப்படையிலான கோட்பாடுகளை கொண்ட திம்பு கோட்டுபாடு 2017 இல் தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. மாறாக பிரிக்கப்பட முடியாத ஓற்றையாட்சிக்கும், பௌத்ததிற்கு முன்னுரிமைக்கும் வழங்கும் தீர்வுக்கு தமிழ்த் தலைவா்கள் தலையசைத்துள்ளனர்.

இதன் மூலம் தமிழ் மக்கள் சுயநிர்ணயம் மீறப்பட்டுள்ளது. முதன் முதலாக பௌத்ததிற்கு முன்னுரிமை வழங்கியதனை ஏற்றுக்கொண்டு தமிழ் தலைவா்களுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் நன்றி தெரிவித்திருக்கின்றார். பௌத்ததிற்கு முன்னுரிமை வழங்கும் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதன் விளைவுதான் யாழ் முற்றவெளியில் பிக்குவின் உடல் தகனம் செய்வதற்குரிய துணிவை கொடுத்துள்ளது. என்றே நான் எண்ணுகிறேன்.

எனவே அரசியலுக்காக, வாக்குகளுக்காக கொழும்பில் ஒரு முகமும், தமிழ் மக்களிடம் ஒரு முகமும் என மக்களை ஏமாற்றுகின்றனர். எனத் தெரிவித்தவா்

வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் கிளிநொச்சி மக்கள் ஒரு மாற்றத்திற்காக தங்களின் வாக்குக்களை அளிக்க வேண்டும், மக்களின் துயரம் இன்னும் தொடர்கிறது, மக்கள்பிரதிநிதிகள் தங்களுக்குரிய பணியை செய்யத் தவறியதன் விளைவே. மக்களின் அடிப்படை விடயங்களில் எவ்வளவோ விடயங்களை சாதிக்கின்ற அதிகாரத்தை மக்கள் வழங்கிய போதும் அவர்கள் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவாக அரசை தக்கவைக்கின்றவா்கள் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவளித்து வருகின்றார்கள். எனவே மக்கள் தொடர்ச்சியாக இவ்வாறு ஏமாற்றப்படக் கூடாது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

இந்த உள்ளுராட்சி தேர்தலில் எங்களால் நிறுதப்பட்டுள்ள வேட்பாளர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவா்கள், மக்களுக்காக உழைப்பவர்கள், எனவே கேடயச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற எங்கள் வேட்பாளர்களை தெரிவு செய்து ஊழலற்ற வினைத்திறனமிக்க சபையை அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் கடந்த 2011 இலிருந்து ஜந்து வருடங்களாக இங்கு ஒரு சபை இருந்தது ஆனால் அது என்ன செய்தது? எனவே அந்த அனுபவத்தை மக்கள் மனத்தில் கொண்டு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.