1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் – ஜூலை 27 முதல் அக்டோபர் 10 வரையான சம்பவங்கள் பற்றிய சில குறிப்புகள்:

திலீபனின் 39 வது நினைவு நிகழ்வுகள் தற்போது நடக்கின்றன. வழமைபோல உணர்ச்சியூட்டும் பிரச்சாரங்கள் தொடர்கின்றன.
தற்போதைய தலைமுறையினர் சமூக வலைதளங்கள் – றீல்ஸ்- போன்றவற்றினூடாக நடந்த சம்பவங்கள் பற்றி கிரகித்து கொள்கிறார்கள்- புலம்பெயர் தமிழர் மத்தியிலும் இது பற்றிய – Narrative – பிரச்சாரப்படுத்தப்படுகிறது. அன்று 15 வயதிலிருந்து 35 வயதுவரை இருந்தவர்களுக்கு – ஒப்பந்தம் கைசாத்தனதிலிருந்து – அக்டோபர் 10ம் திகதி யுத்தம் ஆரம்பிக்கும்வரை அங்கு வாழ்ந்தவர்கள் – இன்று தமது 50- 80 வயதுகளை தொட்டவர்களாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
அன்று வடக்கு கிழக்கில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு விடயங்களை புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதை அறிய – நூலகம் – Google AI – போன்றவற்றில் தேடியபோது – ஒரு விடயம் புரிந்தது.
அந்த நேரத்தில் – Mobile – சமூகவலைத்தளம் – இல்லாதபோது – யாழ் பத்திரிகைகள் – ஒலிபெருக்கிகள் – பொதுக்கூட்டங்கள் ஊடாகவே – இதுபற்றிய செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தகவலுக்காக கீழே பகிர்ந்துளேன்.
இந்தக் காலகட்டம் பற்றி – நடந்தேறிய சம்பவங்களின் பின்னணிகள் பற்றி – அறிவுபூர்வமாக – objective – ஆய்வுகள் எதுவும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. 1987 அக்டோபர் 10 யுத்தம் தொடங்கும் வரை – கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் – ஒருபுறத்தில் புலிகளின் தலைவர்கள் இந்திய தூதுவருடன் பேசுகிறார்கள்- இந்திய இராணுவத்துடன் மரியாதையான உறவை பேணுகிறார்கள் – அதே நேரம் – யாழ் பத்திரிகைகள் – ஊடாக பாரிய இந்திய எதிர் பிரச்சாரம் – மக்கள் போராட்டம் என நடக்கின்றது.
இது எப்படி சாத்தியமானது? குறிப்பாக பிரபாகரனுக்கும் இந்திய தூதுவர் தீட்சித் க்கும் யாழில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக – அமையப்போகும் மாகாணசபையில் – தேர்தல் வரையான – இடைக்கால நிர்வாகத்தில் – புலிகளுக்கே முதன்மையான ஸ்தானம் கொடுக்கப்பட்டு – செப்டம்பர் 26ம் திகதி – திலீபனின் மறைவிற்கு பின்னர் – ஒப்பந்தமும் கைச்சாத்தாகின்றது.
11-8-1987 உதயன் பத்திரிகையில் சோவியத் பத்திரிகை பிராவ்டாவில் – ஒப்பந்தத்தை வரவேற்று வெளிவந்த கட்டுரையும் – அதற்கு அமெரிக்க தூதுவரின் எதிர்வினை பற்றியும் குறிப்புக்கள் உள்ளன.
இவ்வாறெல்லாம் சர்வதேச சக்திகளின் – நுணுக்கமான காய் நகர்த்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தமை முழுமையாக கணிக்கப்பட்டாதா? அல்லது அதன் ஒரு அங்கமாக தமிழ் அரசியல் யுத்தத்தை நோக்கி நகர்த்தப்பட்டதா? இவைகளெல்லாம் விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.
5-10-1987 – குமரப்பா – புலேந்திரன் – கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் யுத்தத்தை நோக்கி இருதரப்ப்பும் நகர்கின்றன – அதன் பின்னர் நடைபெற்றவை வரலாறு ( The rest is history )ஆயுதப்போராடம் என்பது அரசியலின் நீட்சி (Armed struggle is the extension of Politics) என்று சொல்வார்கள், அப்படியாயின் யாருடய அரசியல் – அங்கு இலாபமடைந்தது என்பது – வெறும் உணர்ச்சிகளுக்கு அப்பால் நிதானமாகவும் – விவேகமாகவும் – கணிக்கப்பட வேண்டியது .
ஜூலை ஒப்பந்தம் முதல் அக்டோபர் யுத்தம் தொடங்கும் வரையான சில நிகழ்வுகள்: 1987 ஜூலை 27ம் திகதி – இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது.3-08-1987 – பிரபாகரன் – மனைவி -பிள்ளைகள் – திலீபன்- யோகி – அஜித்- கிட்டு- ரஹீம் – சொர்ணம் – கடாபி ஆகியோர் இந்திய விமானப்படை விமானத்தில் பலாலி திரும்புகிறார்கள் –
சுதுமலைக்கு IPK பெரும் எடுப்பிலான பாதுகாப்புடன் கொண்டு வரப்ப டுகிறார்கள் நல்லுறவு தொடருகிறது- அடேல் பாலசிங்கத்தின் – விடுதலை வேட்கை – The Wiil to Freedom ஆங்கில நாவலில் – ஆகஸ்ட் 1987 இல் – குமரப்பா – புலேந்திரன் திருமணம் – IPKF அதிகாரிகள் பிரசன்னம் – விருந்துபசாரம் பற்றி – சோகத்துடன் நினைவுகூருகிறார்.
(Google AI: IPKF இன் வருகை: இந்திய அமைதிப்படையின் (IPKF) உயர் அதிகாரிகளின் வருகையை அடேல் பாலசிங்கம் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
இந்திய இராணுவத் தளபதிகள் அங்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டும் வரவில்லை; அவர்கள் கௌரவ விருந்தினர்களாக திருமணக் கொண்டாட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று, எல்.டி.டி.இ (LTTE) தலைமையுடன் இணைந்து உணவு அருந்தி, மகிழ்ந்து கொண்டாடினார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.)
வன்முறைகள் – பலதரப்பினராலும் தொடர்கின்றன- ஆவண காப்பகங்களில் உள்ள – ஜுலை – ஆகஸ்ட் மாத நாளிதழ்கள் – தொடர்ச்சியான வன்முறைகள்- EROS மக்கள் போராட்டம் நடத்தியமை- பற்றிய செய்திகளே பத்திரிகைகளை நிரப்பியுள்ளன
13- 09- 1987 – இல் கிழக்கில் 100க்கு மேற்பட்ட EPRLF – PLOTE உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் புலிகளால் கொல்லப்படுகிறார்கள் 15-09-1987 திலீபன் உண்ணாவிரதம் – ஆரம்பம்- இதன்போது பிரபா- டிக்ஸிட் பேச்சுவார்த்தைகள் – 23ம் திகதி முதல் நடக்கின்றது
– 26ம் திகதி மாகாண சபைகளை ஏற்றுக்கொண்டு அதற்கான இடைக்கால நிர்வாகம் பற்றிய விபரங்கள் – அடங்கிய ஒப்பந்தம் கைச்சாத்தாக்குகின்றது .5- 10 – 1987 புலேந்திரன் குமரப்பா உட்பட பலர் கைது – தொடர்ந்த தற்கொலை – அக்டோபர் 10ம் திகதியளவில் மீண்டும் யுத்தம்gg ஆரம்பிக்கின்றது. தொடர்கின்றது