7 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி

ஷங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சீனாவின் தியான்ஜினில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா விதித்த வரிகள் மற்றும் அமெரிக்காவுடனான சீனாவின் நிலையற்ற உறவுகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.